மாவட்ட செய்திகள்

புதுச்சேரியை போல தமிழகத்திலும் பள்ளிகள் திறக்கப்படுமா? கல்வித்துறை அதிகாரிகள் நாளை முக்கிய ஆலோசனை + "||" + Will schools be opened in Tamil Nadu like in Puducherry? Education officials have important advice tomorrow

புதுச்சேரியை போல தமிழகத்திலும் பள்ளிகள் திறக்கப்படுமா? கல்வித்துறை அதிகாரிகள் நாளை முக்கிய ஆலோசனை

புதுச்சேரியை போல தமிழகத்திலும் பள்ளிகள் திறக்கப்படுமா? கல்வித்துறை அதிகாரிகள் நாளை முக்கிய ஆலோசனை
புதுச்சேரியை போல தமிழகத்திலும் பள்ளிகள் திறக்கப்படுமா? கல்வித்துறை அதிகாரிகள் நாளை முக்கிய ஆலோசனை.
சென்னை,

கொரோனா நோய்த் தொற்று பாதிப்பு தமிழகத்தில் சற்று குறைந்து வருகிறது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் பள்ளிகள் மூடப்பட்டிருந்த நிலையில், 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் கடந்த கல்வியாண்டின் இறுதியில் பள்ளிகள் திறக்கப்பட்டன. பின்னர் மீண்டும் தொற்று அதிகரித்ததால் பள்ளிகள் மூடப்பட்டன.

அதன்பிறகு தொடர்ந்து பள்ளிகள் மூடப்பட்டே இருக்கின்றன. இந்த நிலையில் புதுச்சேரியில் பள்ளிகள், கல்லூரிகள் வருகிற 16-ந் தேதி முதல் திறக்கப்பட இருக்கின்றன. அதேபோல தமிழகத்திலும் பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்பட வாய்ப்பு உள்ளதா என்ற கேள்வி சமீப நாட்களாக எழுந்தவண்ணம் உள்ளது. இதுதொடர்பாக முதல்-அமைச்சர்தான் முடிவுகளை அறிவிப்பார் என்று பள்ளிக்கல்வி, உயர்கல்வித் துறை அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில், பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலாளர் காகர்லா உஷா, அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுடன் நாளை (வெள்ளிக்கிழமை) ஆலோசனை நடத்த இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. இதில் பள்ளிகள் திறப்பு, மாணவர் சேர்க்கையை அதிகரிப்பது, விலையில்லா பாடப்புத்தகங்கள், மடிக்கணினி வழங்கப்பட்ட விவரம், பள்ளிகளுக்கான அங்கீகாரம் வழங்குவது உள்பட பல்வேறு விஷயங்கள் பேசப்பட இருப்பதாக கூறப்படுகிறது.

இதில் தெரிவிக்கப்படும் கருத்துகள், மருத்துவ நிபுணர்களின் ஆலோசனைகள் ஆகியவற்றின் அடிப்படையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பள்ளிகள் திறப்பது குறித்த அறிவிப்பை வெளியிடுவார் என்று கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. காங்கிரஸ் பொது செயலாளர்களுடன் வரும் 28ந்தேதி சோனியா காந்தி ஆலோசனை
காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி கட்சியின் பொது செயலாளர்களுடன் வருகிற 28ந்தேதி ஆலோசனை நடத்த உள்ளார்.
2. 1 முதல் 5-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பது குறித்து நிபுணர்கள் குழுவுடன் 19-ந் தேதி பசவராஜ் பொம்மை ஆலோசனை
கர்நாடகத்தில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பள்ளிகளை திறப்பது குறித்து மந்திரிகள், நிபுணர்கள் குழுவினருடன் 19-ந் தேதி முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை ஆலோசனை நடத்த உள்ளார். கொரோனா கட்டுப்பாடுகளில் மேலும் தளர்வுகள் செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
3. குழந்தைகள் காப்பகத்திற்கு ‘சீல்’ வைத்த அதிகாரிகள் அரசு பள்ளி ஆசிரியை-கணவர் மீது வழக்கு
காப்பக குழந்தைகளை வீட்டுவேலைகளுக்கு பயன்படுத்தி வந்ததாக புகார் வந்ததன் அடிப்படையில் காப்பகத்திற்கு சீல் வைக்கப்பட்டது. இது தொடர்பாக அரசு பள்ளி ஆசிரியை-கணவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
4. தமிழகத்தில் 1-8ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு பற்றி அதிகாரிகள் ஆலோசனை
தமிழகத்தில் 1 முதல் 8 வரையிலான வகுப்புகளுக்கு பள்ளிகளை திறப்பது பற்றி அதிகாரிகள் இன்று ஆலோசனை மேற்கொள்கின்றனர்.
5. உத்தரபிரதேச சட்டசபை தேர்தலையொட்டி காங்கிரஸ் நிர்வாகிகளுடன் பிரியங்கா ஆலோசனை
உத்தரபிரதேச சட்டசபை தேர்தலையொட்டி, மாநில காங்கிரஸ் நிர்வாகிகளை பிரியங்கா சந்தித்து வருகிறார். முதலாவது வேட்பாளர் பட்டியலை இறுதி செய்கிறார்.