மாவட்ட செய்திகள்

கொரோனா நிவாரண நிதி ரூ.133 கோடியை மாற்றுத்திறனாளிகளுக்கு முழுமையாக வழங்க வேண்டும் + "||" + The Corona Relief Fund should provide Rs 133 crore in full to the disabled

கொரோனா நிவாரண நிதி ரூ.133 கோடியை மாற்றுத்திறனாளிகளுக்கு முழுமையாக வழங்க வேண்டும்

கொரோனா நிவாரண நிதி ரூ.133 கோடியை மாற்றுத்திறனாளிகளுக்கு முழுமையாக வழங்க வேண்டும்
கொரோனா நிவாரண நிதியாக ஒதுக்கப்பட்ட ரூ.133 கோடியை மாற்றுத்திறனாளிகளுக்கு முழுமையாக வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சென்னை,

கொரோனா பரவலை தடுக்க கடந்த ஆண்டு அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு காரணமாக வாழ்வாதாரம் இழந்து பாதிக்கப்பட்டுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு உரிய நிவாரண உதவிகளை வழங்கக்கோரி சென்னை ஐகோர்ட்டில் பல வழக்குகள் தொடரப்பட்டன.

இந்த வழக்குகளை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர், மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை வழங்க அரசு ஒதுக்கீடு செய்த ரூ.133 கோடியில், ரூ.69 கோடி வழங்கப்பட்டுள்ளது. மீத தொகை என்ன ஆனது? என்று கேள்வி எழுப்பியிருந்தனர். மேலும் இதுகுறித்து அறிக்கை தாக்கல் செய்யவும் அரசுக்கு உத்தரவிட்டு இருந்தனர்.

விவரங்கள் இல்லை

இந்த வழக்கு நீதிபதிகள் முன்பு மீண்டும் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வக்கீல், ‘அரசு தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மாற்றுத் திறனாளிகளுக்கான பராமரிப்பு தொகை, ஓய்வூதியம் வழங்குவது குறித்த விவரங்கள் மட்டுமே அரசு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. உதவித்தொகை குறித்த விவரங்கள் முறையாக தெரிவிக்கப்படவில்லை. மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் பாதுகாப்பு சட்டப்படி மற்றவர்களுக்கு கொடுக்கும் நிவராண தொகையை விட 25% அதிகமாக மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்க வேண்டும், ஆனால் கொரோனா நிவாரண நிதியாக மாற்றுத்திறனாளிக்கு ஆயிரம் ரூபாய் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது’ என்று கூறினார்.

மறுபரிசீலனை

அரசு தரப்பில் ஆஜரான வக்கீல், ஒதுக்கீடு செய்யப்பட்ட நிவாரண தொகையை வழங்க மாற்றுத்திறனாளிகளை கண்டறிய வேண்டும் என மாவட்ட கலெக்டர்களுக்கு அரசு உத்தரவிடப்பட்டுள்ளதாக கூறினார்.

இதையடுத்து நீதிபதிகள், ‘‘தமிழக அரசு தாக்கல் செய்த அறிக்கை முழுமையாக இல்லை. மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்க வேண்டிய தொகை எவ்வளவு? எந்த முறையில் வழங்கப்பட வேண்டும்? என்பதை மறுபரிசீலனை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது” என்று கூறினர்.

மேலும், “ஒதுக்கீடு செய்யப்பட்ட ரூ.133 கோடியை மாற்றுத்திறனாளிகளுக்கு முழுமையாக தமிழக அரசு வழங்க வேண்டும். பின்னர் அதன் விவரங்களை விரிவான அறிக்கையாக தாக்கல் செய்யவேண்டும்’’ என்று உத்தரவிட்டனர்.

பின்னர் விசாரணையை 4 வாரத்துக்கு தள்ளிவைத்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. பெப்சி தொழிலாளர்களுக்கு குடியிருப்பு அமைக்க நடிகர் விஜய் சேதுபதி ரூ.1 கோடி நிதி உதவி
பெப்சி அமைப்பின் தலைவராக இயக்குனர் செல்வமணி பொறுப்பேற்றப் பிறகு பல்வேறு நலத்திட்டங்களையும் உதவிகளையும் பெற்றுத் தந்தார்.
2. சிறு, குறு, நடுத்தர தொழில் பகுதிகளை மேம்படுத்த சிறுதொழில் மேம்பாட்டு வங்கி ரூ.524 கோடி நிதி உதவி
குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் பகுதிகளை மேம்படுத்த சிறுதொழில் மேம்பாட்டு வங்கி ரூ.524 கோடி நிதி உதவி செய்ய உள்ளது. இதற்கான ஒப்புதல் கடிதம் வங்கி சார்பில் மு.க.ஸ்டாலினிடம் வழங்கப்பட்டது.
3. மயிலாடுதுறை அருகே மின்சாரம் தாக்கி 2 பேர் பலி: இறந்தவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம் நிதி உதவி
மயிலாடுதுறை அருகே மின்சாரம் தாக்கி 2 பேர் பலி: இறந்தவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம் நிதி உதவி மு.க.ஸ்டாலின் உத்தரவு.
4. சென்னை விமான நிலையத்தில் 10 வயது சிறுவனின் சிறுநீரக சிகிச்சைக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் உதவி
சென்னை விமான நிலையத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியனை சந்தித்து பெற்றோர் உதவி கேட்டதால், 10 வயது சிறுவனின் சிறுநீரக பிரச்சினைக்கு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்க அமைச்சர் ஏற்பாடு செய்தார்.
5. பூந்தமல்லியில் சாலை விபத்தில் சிக்கிய வாலிபருக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் உதவி
பூந்தமல்லியில் சாலை விபத்தில் சிக்கிய வாலிபருக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் உதவி தனது காரிலேயே மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தார்.