மாவட்ட செய்திகள்

புதுச்சேரியில் 100-க்கு கீழ் குறைந்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை + "||" + Lower corona impact number below 100 in Pondicherry

புதுச்சேரியில் 100-க்கு கீழ் குறைந்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை

புதுச்சேரியில் 100-க்கு கீழ் குறைந்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை
புதுச்சேரியில் தற்போது 1,170 பேர் மருத்துவமனைகளில் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
புதுச்சேரி,

புதுச்சேரி சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பின்படி, அங்கு கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 94 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் புதுச்சேரியில் 70 பேர், காரைக்காலில் 19 பேர், மாஹேவில் 2 பேர், ஏனாமில் 3 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

இதன் மூலம் புதுச்சேரியில் இதுவரை பதிவான கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை 1,19,603 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதனால் புதுச்சேரியில் பதிவான மொத்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை 1,776 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 171 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ள நிலையில், இதுவரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,16,657 ஆக அதிகரித்துள்ளது. புதுச்சேரியில் தற்போது 1,170 பேர் மருத்துவமனைகளில் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. புதுச்சேரியில் இருந்து முதல் முறையாக மாநிலங்களவை உறுப்பினராக பா.ஜ.க. வேட்பாளர் தேர்வு
புதுச்சேரியில் இருந்து பா.ஜனதாவை சேர்ந்த செல்வகணபதி முதல் முறையாக போட்டியின்றி தேர்வு ஆகியுள்ளார்.
2. இந்தியாவில் மேலும் குறைந்த கொரோனா பாதிப்பு: புதிதாக 28,326 பேருக்கு தொற்று!
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 28,326 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
3. புதுச்சேரியில் 3-கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் - மாநில தேர்தல் ஆணையர் அறிவிப்பு
புதுச்சேரியில் அக்டோபர் 21, 25, 28 ஆகிய தேதிகளில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையர் ராய் பி தாமஸ் அறிவித்துள்ளார்.
4. புதுச்சேரியில் புதிதாக 79 பேருக்கு கொரோனா பாதிப்பு
புதுச்சேரியில் கடந்த 24 மணி நேரத்தில் 78 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர்.
5. புதுச்சேரிக்கு தனி கல்வி வாரியம் - அரசு அதிகாரிகள் முடிவெடுக்க ஐகோர்ட்டு உத்தரவு
புதுச்சேரிக்கு தனி கல்வி வாரியம் அமைப்பது தொடர்பாக புதுச்சேரி அரசு அதிகாரிகள் தான் முடிவெடுக்க வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

அதிகம் வாசிக்கப்பட்டவை