மாவட்ட செய்திகள்

குரோம்பேட்டையில் அரிசி வியாபாரி கொலையில் 2 பேர் கைது + "||" + Two arrested for killing rice trader in Chromepet

குரோம்பேட்டையில் அரிசி வியாபாரி கொலையில் 2 பேர் கைது

குரோம்பேட்டையில் அரிசி வியாபாரி கொலையில் 2 பேர் கைது
சென்னையை அடுத்த குரோம்பேட்டையை சேர்ந்தவர் ஆனந்த்ராஜ் (வயது 46). இவர், குரோம்பேட்டை சி.எல்.சி. சாலையில் அரிசி கடை வைத்து நடத்தி வந்தார். நேற்று முன்தினம் மாலை கடையை திறக்க சென்றபோது ஆனந்தராஜை மர்மநபர்கள் சரமாரியாக வெட்டிக்கொலை செய்தனர்.
இதுபற்றி குரோம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து அதே பகுதியை சேர்ந்த சின்னா என்ற ரஞ்சித்குமார் (30), சுண்டு என்ற சதீஷ் (21) ஆகியோரை கைது செய்தனர். மேலும் 2 பேரை தேடி வருகிறார்கள். கொலையான ஆனந்தராஜின் குடும்பத்தினருக்கு தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பாதுகாப்பு பேரவை தலைவர் சவுந்தர்ராஜன் ஆகியோர் ஆறுதல் கூறினர்.

இந்த கொலை வழக்கில் உண்மையான குற்றவாளிகளை கைது செய்யக்கோரி பல்வேறு நாடார்கள் சங்கம் சார்பில் குரோம்பேட்டை ஜி.எஸ்.டி. சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் சுமார் 30 நிமிடம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. பின்னர் சாலை மறியலில் ஈடுபட்டவர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி அனைவரையும் கலைந்து போக செய்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. காஷ்மீரில் லஷ்கர் இ தொய்பாவின் கிளை அமைப்பின் உறுப்பினர் கைது
காஷ்மீரில் லஷ்கர் இ தொய்பாவின் கிளை அமைப்பின் உறுப்பினர் ஒருவரை சி.ஆர்.பி.எப். வீரர்கள் கைது செய்துள்ளனர்.
2. திருவள்ளூர் அருகே போலி ஆவணம் மூலம் ரூ.35 லட்சம் நிலத்தை அபகரித்த 3 பேர் கைது
திருவள்ளூர் அருகே போலி ஆவணம் மூலம் ரூ.35 லட்சம் நிலத்தை அபகரித்த 3 பேரை நில அபகரிப்பு தடுப்பு போலீசார் கைது செய்து நடவடிக்கை எடுத்தனர்.
3. போலி ஆவணம் மூலம் ரூ.35 லட்சம் நிலத்தை அபகரித்த 3 பேர் கைது
திருவள்ளூர் அருகே போலி ஆவணம் மூலம் ரூ.35 லட்சம் நிலத்தை அபகரித்த 3 பேரை நில அபகரிப்பு தடுப்பு போலீசார் கைது செய்து நடவடிக்கை எடுத்தனர்.
4. குடிபோதையில் தகராறு கிரிக்கெட் மட்டையால் தாக்கி டிரைவரை கொன்ற மனைவி
குடிபோதையில் தகராறு செய்த டிரைவரை கிரிக்கெட் மட்டையால் தாக்கி கொன்ற அவரது மனைவியை போலீசார் கைது செய்தனர்.
5. லஞ்ச வழக்கில் சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா கிளை மேலாளர் கைது
மத்திய பிரதேசத்தில் லஞ்ச வழக்கு ஒன்றில் சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா கிளை மேலாளரை சி.பி.ஐ. கைது செய்துள்ளது.