மாவட்ட செய்திகள்

மன்னார்குடியில் மின்சார சட்ட திருத்த மசோதாவை கைவிடக்கோரி தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் + "||" + Trade unions protest in Mannargudi to drop electricity law amendment bill

மன்னார்குடியில் மின்சார சட்ட திருத்த மசோதாவை கைவிடக்கோரி தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

மன்னார்குடியில் மின்சார சட்ட திருத்த மசோதாவை கைவிடக்கோரி தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
மன்னார்குடியில் மின்சார சட்ட திருத்த மசோதாவை கைவிடக்கோரி தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மன்னார்குடி,

நாடாளுமன்ற நடப்பு கூட்ட தொடரில் மின்சார சட்ட திருத்த மசோதா 2021-ஐ தாக்கல் செய்ய உள்ளதை கைவிடக் கோரி மின்வாரிய அனைத்து தொழிற் சங்கத்தினர் மன்னார்குடி பூக்கொல்லை ரோட்டில் உள்ள மின் வாரிய செயற்பொறியாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்துக்கு தொழிலாளர் முன்னேற்ற சங்க திட்ட செயலாளர் தொ.ஜான் பிரிட்டோ தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் பொறியாளர் சங்க திருச்சி மண்டல செயலாளரும், அனைத்து இந்திய மின் வாரிய பட்டய பொறியாளர்கள் சம்மேளன தென் மண்டல தலைவருமான சா.சம்பத் கலந்து கொண்டு பேசினார்.

தனியார்மயத்துக்கு எதிர்ப்பு

இதில் தொழிலாளர் முன்னேற்ற சங்க கோட்ட செயலாளர் காளிதாஸ், சம்மேளன திட்ட செயல் தலைவர் த.ராஜகோபால், கோட்ட செயலாளர் ஜெயபால், ஐக்கிய சங்க பிரதிநிதி முத்துமாணிக்கம் மற்றும் அனைத்து சங்க பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் மின்சார சட்ட திருத்த மசோதாவுக்கு எதிராகவும், மின் வாரியம் தனியார்மயமாவதை எதிர்த்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

தொடர்புடைய செய்திகள்

1. உ.பி. சம்பவத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்: சுப்ரீம் கோர்ட்டு கண்காணிப்பில் தனி குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும்
உத்தரபிரதேச சம்பவத்தை கண்டித்து நேற்று சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், இந்த விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு கண்காணிப்பில் தனி குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என தொல்.திருமாவளவன் எம்.பி. கோரிக்கை வைத்துள்ளார்.
2. வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கோவில்களை திறக்கக்கோரி பா.ஜ.க. ஆர்ப்பாட்டம்
தமிழகத்தில் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கோவில்களை திறக்கக்கோரி பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
3. காஞ்சீபுரத்தில் டாஸ்மாக் கடையை இடமாற்றம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்
காஞ்சீபுரத்தில் டாஸ்மாக் கடையை இடமாற்றம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.
4. காஞ்சீபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் மத்திய அரசின் வேளாண் சட்டங்களை கண்டித்து விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
காஞ்சீபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் மத்திய அரசின் வேளாண் சட்டங்களை கண்டித்து விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
5. அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆவதற்கு எதிர்ப்பு: சிவாச்சாரியார்கள் ஆர்ப்பாட்டம்
அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆவதற்கு எதிர்ப்பு: சிவாச்சாரியார்கள் ஆர்ப்பாட்டம்.