மாவட்ட செய்திகள்

நிலப்பிரச்சினையில் விவசாயியை வெட்டிய தந்தை-மகன் கைது + "||" + Father-son arrested for cutting farmer in land dispute

நிலப்பிரச்சினையில் விவசாயியை வெட்டிய தந்தை-மகன் கைது

நிலப்பிரச்சினையில் விவசாயியை வெட்டிய தந்தை-மகன் கைது
நிலப்பிரச்சினையில் விவசாயியை வெட்டிய தந்தை-மகன் கைது செய்யப்பட்டனர்.
மங்களமேடு:
பெரம்பலூர் மாவட்டம் பெருமத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட பள்ளக்காடு நல்லூரைச் சேர்ந்தவர் சிவக்குமார்(வயது 50). விவசாயி. இவருக்கும், இவரது அண்ணன் முருகேசன்(வயது 60) என்பவருக்கும் நிலப்பிரச்சினை இருந்து வந்ததாகவும், இந்நிலையில் சம்பவத்தன்று சிவக்குமார் தனது காட்டில் இருந்தபோது முருகேசன் மற்றும் அவரது மகன் சுரேஷ்(35) ஆகியோர் சேர்ந்து சிவக்குமாரை ஆபாசமாக திட்டி, கத்தியால் வெட்டியதாகவும் கூறப்படுகிறது. இதைக் கண்ட அக்கம், பக்கத்தினர் சிவகுமாரை மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதுகுறித்த புகாரின்பேரில் மங்களமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதைத்தொடர்ந்து முருகேசன், சுரேஷ் ஆகியோரை இன்ஸ்பெக்டர் கலா கைது செய்தார்.

தொடர்புடைய செய்திகள்

1. சிவகங்கை பா.ஜனதா பிரமுகர் கொலையில் 3 பேர் கைது
சிவகங்கை பா.ஜனதா பிரமுகர் கொலையில் 3 பேரை போலீசார் கைதுசெய்தனர்.
2. லோடு ஆட்டோவில் ரேஷன் அரிசி கடத்தியவர் கைது
லோடு ஆட்டோவில் ரேஷன் அரிசி கடத்தியவர் கைது செய்யப்பட்டார்.
3. நம்பியூர் அருகே பிளஸ்-2 மாணவியை கடத்தி திருமணம்; போக்சோவில் எலக்ட்ரீசியன் கைது
நம்பியூர் அருகே பிளஸ்-2 மாணவியை கடத்தி திருமணம் செய்த எலக்ட்ரீசியனை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.
4. கத்தியை காட்டி பணம் பறித்த 2 பேர் கைது
கத்தியை காட்டி பணம் பறித்த 2 பேர் கைது
5. மாணவியை கடத்தியவர் போக்சோ சட்டத்தில் கைது
மாணவியை கடத்தியவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.