மாவட்ட செய்திகள்

சேலம் மாவட்டத்தில் புதிதாக 133 பேருக்கு கொரோனா + "||" + corona

சேலம் மாவட்டத்தில் புதிதாக 133 பேருக்கு கொரோனா

சேலம் மாவட்டத்தில் புதிதாக 133 பேருக்கு கொரோனா
சேலம் மாவட்டத்தில் நேற்று புதிதாக 133 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டது பரிசோதனையில் கண்டறியப்பட்டது.
சேலம்:
சேலம் மாவட்டத்தில் நேற்று புதிதாக 133 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டது பரிசோதனையில் கண்டறியப்பட்டது.
கொரோனா தொற்று
சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தினமும் கொரோனா தொற்று பாதிப்பவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. அதன்படி நேற்று முன்தினம் மாவட்டத்தில் 136 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. நேற்று புதிதாக 133 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
அதன்படி மாநகராட்சி பகுதியில் 23 பேர், சங்ககிரி, கொளத்தூர், காடையாம்பட்டியில் தலா ஒருவர், சேலம் ஒன்றிய பகுதி, நங்கவள்ளியில் தலா 2 பேர், ஓமலூர், வீரபாண்டி, எடப்பாடியில் தலா 3 பேர், தாரமங்கலத்தில் 4 பேர், மேச்சேரியில் 8 பேர் பாதிப்படைந்து உள்ளனர். அதே போன்று கெங்கவல்லி, பெத்தநாயக்கன்பாளையத்தில் தலா 3 பேர், ஆத்தூரில் 6 பேர், வாழப்பாடியில் 7 பேர், தலைவாசலில் 8 பேர் பாதிப்படைந்து உள்ளனர்.
சிகிச்சை பெற்று வருகின்றனர்
மேலும் நாமக்கல் மாவட்டத்தில் இருந்து சேலம் வந்த 9 பேர், ஈரோட்டில் இருந்து வந்த 8 பேர் உள்பட மொத்தம் 133 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனிடையே சிகிச்சை பலனின்றி நேற்று 2 பேர் இறந்தனர்.
இதுவரை 92 ஆயிரத்து 227 பேர் பாதித்து உள்ளனர். 89 ஆயிரத்து 56 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளனர். தற்போது 1,691 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.