மாவட்ட செய்திகள்

ஓய்வுபெற்ற அதிகாரி வீட்டில் 45 பவுன் நகை கொள்ளை கைவரிசை காட்டிய கொள்ளையர்களுக்கு வலைவீச்சு + "||" + Retired officer looted 45-pound jewelery robbery at home

ஓய்வுபெற்ற அதிகாரி வீட்டில் 45 பவுன் நகை கொள்ளை கைவரிசை காட்டிய கொள்ளையர்களுக்கு வலைவீச்சு

ஓய்வுபெற்ற அதிகாரி வீட்டில் 45 பவுன் நகை கொள்ளை கைவரிசை காட்டிய கொள்ளையர்களுக்கு வலைவீச்சு
நங்கநல்லூரில் ஓய்வுபெற்ற வீட்டு வசதி வாரிய அதிகாரி வீட்டில் 45 பவுன் நகை, 2 கிலோ வெள்ளி ஆகியவற்றை கொள்ளையர்கள் திருடிசென்றனர்.
ஆலந்தூர்,

சென்னையை அடுத்த நங்கநல்லூரில் உள்ள ஐயப்பா நகர் பகுதியில் வசித்து வருபவர் ஸ்ரீதர் (வயது 61). இவர் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில் அதிகாரியாக பணியாற்றி ஒய்வு பெற்றவர் ஆவார். இவர் நேற்று முன்தினம் மாலை சென்னை அண்ணா நகரில் உள்ள உறவினர் வீட்டுக்கு பிறந்தநாள் விழாவில் கலந்து கொள்வதற்காக குடும்பத்துடன் சென்றார்.

பின்னர் விழா முடிந்து இரவு 11 மணியளவில் வீட்டுக்கு திரும்பி வந்து பார்த்தபோது, வீட்டின் முன்பக்க இரும்பு கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே பதறியடுத்து கொண்டு வீட்டிற்குள் சென்று பார்த்தபோது, 2 அறைகளில் இருந்த 2 பீரோவில் வைத்திருந்த 45 பவுன் நகை, 2 கிலோ வெள்ளி, ரூ.70 ஆயிரம் மற்றும் ஒரு லேப்டாப் ஆகியவற்றை மர்ம ஆசாமிகள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

கொள்ளையர்களுக்கு வலைவீச்சு

இதுகுறித்து பழவந்தாங்கல் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கொள்ளை சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர். மேலும், கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கொள்ளை நடந்த அறையில் உள்ள பீரோக்கள் மற்றும் கதவுகளில் பதிவான கொள்ளையர்களின் கைரேகைகளை பதிவு செய்தனர்.

மேலும் அந்த பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் கொள்ளையர்களின் உருவம் பதிவாகி உள்ளதா என போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் அதிகாரி வீட்டில் கைவரிசை காட்டிய கொள்ளையர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. வெல்டிங் மூலம் ஏ.டி.எம். எந்திரத்தை துண்டு துண்டாக வெட்டி ரூ.4 லட்சம் கொள்ளை
வெல்டிங் மெஷின் மூலம் ஏ.டி.எம். எந்திரத்தை துண்டு துண்டாக வெட்டி ரூ.4 லட்சத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
2. பணம், பரிசு பொருட்கள் கொண்டு செல்வதை தடுக்க 12 பறக்கும் படை அமைப்பு
வேலூர் மாவட்டத்தில் பணம், பரிசு பொருட்கள் கொண்டு செல்வதை தடுக்க 12 பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது.
3. துப்பாக்கி முனையில் நடிகையிடம் பணம் பறிப்பு
துப்பாக்கி முனையில் நடிகையிடம் பணம் பறிப்பு.
4. அம்மன் கோவில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளை
அம்மன் கோவில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளை.
5. திருவள்ளூர் அருகே பட்டப்பகலில் துணிகரம்: அஞ்சல் அலுவலக ஊழியர் வீட்டில் 26 பவுன் நகை கொள்ளை
திருவள்ளூர் அருகே பட்டப்பகலில் அஞ்சல் அலுவலக ஊழியர் வீட்டில் 26 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டது.