மாவட்ட செய்திகள்

மயிலாடுதுறை மாவட்டத்தில் கிராமங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் + "||" + Corona vaccine camp in the villages in Mayiladuthurai district

மயிலாடுதுறை மாவட்டத்தில் கிராமங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் கிராமங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்
மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் கொரொனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
சீர்காழி,

தமிழகம் முழுவதும் கொரோனா தொற்றால் அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் வகையில் ஊராட்சி தோறும் தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. அதன்படி நேற்று சீர்காழி அருகே அத்தியூர் ஊராட்சியில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. முகாமிற்கு பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். ஒன்றியக்குழு தலைவர் கமலஜோதி தேவேந்திரன், தி.மு.க. மேற்கு ஒன்றிய பொறுப்பாளர் பிரபாகரன், மாவட்ட கவுன்சிலர் விஜயேஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி மன்ற தலைவர் ஆதிநாயகி பாஸ்கரன் வரவேற்று பேசினார்.

முகாமை பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்து, தமிழக அரசு சார்பில் சுகாதாரத்துறையில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி பணிகள் குறித்து பேசினார். முகாமில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு தடுப்பூசி போட்டு கொண்டனர். இதில் வட்டார வளர்ச்சி அலுவலர் அருண்மொழி, வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊராட்சிகள்) கஜேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல் நிம்மேலி, புதுப்பட்டினம், திருமுல்லைவாசல், ஆலங்காடு, திருவெண்காடு உள்ளிட்ட ஊராட்சிகளில் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இதில் 2,800 பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டனர். இந்த முகாமில் வட்டார மருத்துவ அலுவலர் ராஜ்மோகன், தி.மு.க. மாவட்ட நிர்வாகி முருகன், கிளை செயலாளர்கள் பாஸ்கரன், ராஜ்குமார், ராஜா, டாக்டர்கள், செவிலியர்கள், பணித்தள பொறுப்பாளர்கள், ஊராட்சி செயலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஊராட்சி செயலாளர் வீரமணி நன்றி கூறினார்.

மயிலாடுதுறை மாவட்டம் கிடங்கல் ஊராட்சியில் ெகாரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. முகாமிற்கு ஊராட்சி மன்ற தலைவர் அமுதா அன்பழகன் தலைமை தாங்கினார். சுகாதார மேற்பார்வையாளர் ஜெயகுமார் முன்னிலை வகித்தார். சுகாதார ஆய்வாளர் மாரிமுத்து வரவேற்றார். முகாமை செம்பனார்கோவில் ஊராட்சி ஒன்றிய தலைவர் நந்தினிஸ்ரீகர் தொடங்கி வைத்தார்.

முகாமில் கிடங்கல், திருக்கடையூர், ஆக்கூர், மடப்புரம், சின்னங்குடி, சின்னமேடு, மாமாகுடி, மருதம்பள்ளம், காலமநல்லூர் சுற்றுப்பகுதிகளை சேர்ந்த 400-க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.

.இதில் ஊராட்சி செயலாளர் மாரிதட்சிணாமூர்த்தி, செவிலியர்கள், ஒன்றிய துணைத் தலைவர் பாஸ்கர், ஊராட்சி மன்ற துணை தலைவர், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

இதேபோல திருவெண்காடு அருகே கீழ சட்டநாதபுரம் ஊராட்சியில் உள்ள காவளம்பாடி, நெம்மேலி ஆகிய இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது. இந்த முகாமிற்கு சீர்காழி ஒன்றிய ஆணையர் அருள்மொழி தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர் கஜேந்திரன் முன்னிலை வகித்தார். ஊராட்சி மன்ற தலைவர் துரைராஜன் வரவேற்றார். முகாமை சீர்காழி ஒன்றிய குழுத்தலைவர் கமலஜோதி தேவேந்திரன் தொடங்கி வைத்தார். இதில் அரசு மருத்துவர்கள் அமிழ்தினி, சம்பத்குமார் தலைமையிலான மருத்துவ குழுவினர் 400 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

1. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 2 ம் கட்டமாக 510 மையங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் - கலெக்டர் நேரில் ஆய்வு
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 2-ம் கட்டமாக 510 மையங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் நேற்று நடந்தது. இதை கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி நேரில் ஆய்வு செய்தார்.
2. திருவண்ணாமலை மாவட்டத்தில் 2-வது கட்டமாக கொரோனா தடுப்பூசி முகாம்
திருவண்ணாமலை மாவட்டத்தில் 2-வது கட்டமாக நடந்த கொரோனா தடுப்பூசி முகாம்களில் பொதுமக்கள் ஆர்வமாக பங்கேற்றனர்.
3. கொரோனா தடுப்பூசி முகாம்
மண்டபம் யூனியனில் கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது.
4. 275 மையங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்
காரியாபட்டி, நரிக்குடி, திருச்சுழி ஆகிய ஒன்றியங்களில் 275 மையங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் இன்று நடக்கிறது.
5. கொரோனா தடுப்பூசி முகாம்
18 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது.