மாவட்ட செய்திகள்

812 மது பாட்டில்கள் அழிப்பு + "||" + wines bottle demolish

812 மது பாட்டில்கள் அழிப்பு

812 மது பாட்டில்கள் அழிப்பு
பறிமுதல் செய்யப்பட்ட 812 மது பாட்டில்கள் அழிப்பு
போடிப்பட்டி
கொரோனா ஊரடங்கு காலத்தில் ஒரு சிலர் மாவட்ட எல்லைகளைத் தாண்டி சட்ட விரோதமாக மது பாட்டில்களைக் கடத்தி வந்தனர்.மேலும் ஒரு சிலர் சட்டவிரோத மதுவிற்பனையிலும் ஈடுபட்டனர்.தொடர் சோதனையின் மூலம் அவர்களை மடக்கிப் பிடித்த மடத்துக்குளம் போலீசார் அவர்களிடமிருந்து மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். 
அவ்வாறு பறிமுதல் செய்யப்பட்ட 812 மதுபாட்டில்களிலிருந்த மதுவை நேற்று மடத்துக்குளம் போலீஸ் நிலையம் அருகில் குழி தோண்டி ஊற்றி அழித்தனர்.மேலும் சோதனைகளின் போதுபறிமுதல் செய்யப்பட்ட சுமார் ஒரு கிலோ அளவிலான தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை தீ வைத்து எரித்து அழித்தனர்.