மாவட்ட செய்திகள்

பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை + "||" + Bhakreeth prayer in tirupur

பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை

பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை
திருப்பூர் மாவட்டம் முழுவதும் பக்ரீத் பண்டிகையையொட்டி பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் திரளானவர்கள் கலந்து கொண்டனர்.
திருப்பூர
திருப்பூர் மாவட்டம் முழுவதும் பக்ரீத் பண்டிகையையொட்டி பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் திரளானவர்கள் கலந்து கொண்டனர்.
பக்ரீத் பண்டிகை
தியாகத் திருநாள் என்றழைக்கப்படும் பக்ரீத் பண்டிகை முஸ்லிம் மக்களால் நேற்று கொண்டாடப்பட்டது. இறைதூதரின் தியாகத்தை நினைவு கூறும் விதமாக ஒவ்வோர் ஆண்டும் பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
நேற்று காலை திருப்பூர் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள அனைத்து பள்ளிவாசல்களிலும் பெருநாள் தொழுகை நடைபெற்றது. பின்னர் ஆரோக்கியமான ஆடு, மாடு ஆகியவற்றை முஸ்லிம்கள், இறைவனின் பெயரால் பலியிட்டனர். பின்னர் அதன் இறைச்சியை மூன்று சம பங்குகளாக பிரித்து ஒரு பங்கை அண்டைவீட்டார் மற்றும் நண்பர்களுக்கும், மற்றொரு பங்கை ஏழைகளுக்கும் கொடுத்துவிட்டு மூன்றாவது பங்கை தங்கள் தேவைகளுக்கு பயன்படுத்தினார்கள்.
பள்ளி வளாகத்தில் தொழுகை
இவ்வாறு இறைவனின் பெயரால் விலங்குகளை பலியிடுவது குர்பானி என்று அழைக்கப்படுகிறது. திருப்பூர் பெரிய பள்ளிவாசல், காதர்பேட்டை பள்ளிவாசல், கோம்பைத்தோட்டம் பள்ளிவாசல் உள்ளிட்ட பள்ளிவாசல்களில் நேற்று காலை 7 மணி முதல் காலை 10 மணி வரை தொழுகை நடந்தது. சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் பகுதி, பகுதியாக தொழுகை நடத்தப்பட்டது.
திருப்பூர் நொய்யல் வீதி அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. அதுபோல் வெங்கடேஸ்வரா நகர் பகுதியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் சிறப்பு தொழுகை நடந்தது.
சிறப்பு தொழுகை
மாநகராட்சி அலுவலகம் அருகே உள்ள ஈத்கா பள்ளிவாசலில் நேற்று காலை சிறப்பு தொழுகை நடைபெற்றது. அதுபோல் பெரிய பள்ளிவாசலில் தொழுகை நடந்தது. சி.டி.சி. கார்னர் அல் அமீன் பள்ளி வளாகத்தில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் திரளானோர் கலந்துகொண்டனர். காதர்பேட்டை பள்ளிவாசல் ஜமாத் ஈத்கா பள்ளி மைதானத்திலும் சிறப்பு தொழுகை நேற்று காலை நடைபெற்றது.
பக்ரீத் பண்டிகையையொட்டி முஸ்லிம்கள் புத்தாடை அணிந்து சிறப்பு தொழுகையில் ஈடுபட்டு, குர்பானி கொடுத்து கொண்டாடினார்கள்.
பக்ரீத் பண்டிகையையொட்டி பள்ளிவாசல்கள் முன்பு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. திருப்பூர் மாவட்டம் முழுவதும் பள்ளிவாசல்களில் நேற்று பக்ரீத் பண்டிகையையொட்டி சிறப்பு தொழுகை நடைபெற்றது.

தொடர்புடைய செய்திகள்

1. பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை
நீலகிரி மாவட்டத்தில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு பள்ளிவாசல்களில் முஸ்லிம்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.