மாவட்ட செய்திகள்

விளாத்திகுளம் அருகே கோவிலில் 3 பவுன் நகை திருட்டு + "||" + 3 pound jewellery stolen from temple near vilathikulam

விளாத்திகுளம் அருகே கோவிலில் 3 பவுன் நகை திருட்டு

விளாத்திகுளம் அருகே கோவிலில் 3 பவுன் நகை திருட்டு
விளாத்திகுளம் அருகே கோவிலில் 3 பவுன் நகை திருடப்பட்டது
விளாத்திகுளம்:
விளாத்திகுளத்தில் இருந்து எட்டையாபுரம் செல்லும் சாலையில் கே.சுப்பிரமணியபுரம் கிராமத்தில் கமலாபுரம் கிராமத்திற்கு பாத்தியப்பட்ட செல்லியம்மன் கோவில் உள்ளது. இங்கு பூசாரியாக பணியாற்றிவரும் நாகராஜன் நேற்று முன்தினம் இரவு பூஜையை முடித்துவிட்டு கோவில் கதவை பூட்டி விட்டு சென்றுள்ளார்.நேற்று காலையில் மீண்டும் கோவிலுக்கு பூசாரி வந்தபோது, கதவு உடைக்கப்பட்டு கோவில் திறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். உடனடியாக அவர்  விளாத்திகுளம் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் நடத்திய விசாரணையில் செல்லியம்மன் கழுத்தில் அணியப்பட்டிருந்த 3 பவுன் தங்க நகையையும், உண்டியலை உடைத்து சுமார் ஆயிரம் ரூபாயையும் மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து விளாத்திகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை தேடிவருகின்றனர்.