மாவட்ட செய்திகள்

ஒலிம்பிக் போட்டிக்கு ராணுவ வீரர்கள் 2 பேர் தேர்வு + "||" + For the Olympics Army soldiers 2 people to select from

ஒலிம்பிக் போட்டிக்கு ராணுவ வீரர்கள் 2 பேர் தேர்வு

ஒலிம்பிக் போட்டிக்கு ராணுவ வீரர்கள் 2 பேர் தேர்வு
ஒலிம்பிக் போட்டிக்கு குன்னூர் மெட்ராஸ் ரெஜிமெண்ட் பயிற்சி மைய ராணுவ வீரர்கள் 2 பேர் தேர்வாகி உள்ளனர்.
ஊட்டி, 

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டி நடைபெற உள்ளது. இதில் பல்வேறு நாடுகளில் இருந்து வீரர்கள், வீராங்கனை கள் கலந்துகொள்ள இருக்கின்றனர். தொடர் ஓட்டப்பந்தயம் மற்றும் 20 கி.மீ. நடைபோட்டியில் குன்னூர் வெலிங்டன் மெட்ராஸ் ரெஜிமெண்ட் பயிற்சி மைய ராணுவ வீரர்கள் 2 பேர் தேர்வாகி உள்ளனர்.

ராணுவ பயிற்சி மையத்தில் கடந்த 6 ஆண்டுகளாக பயிற்சி பெற்ற சுபேதார் ஆரோக்கிய ராஜீவ், நாய்ப் சுபேதார் இர்பான் ஆகிய 2 பேர் கலந்துகொள்கின்றனர். இதில் ஆரோக்கிய ராஜீவ் மெட்ராஸ் ரெஜிமென்டின் அர்ஜுனா விருது பெற்றவர் என்பது குறிப்பிடத் தக்கது.

இவர்கள் அடையாளம் காணப்பட்டு கடந்த 6 மாதங்களாக தங்கராஜ் விளையாட்டு மைதானத்தில் பயிற்சியாளர் மூலம் பயிற்சி அளிக்கப்பட்டது. 400 மீட்டர் தொடர் ஓட்டப்பந்தய தேசிய அளவிலான போட்டியில் தங்கப்பதக்கம் மற்றும் ஆசிய விளையாட்டு போட்டியில் வெண்கல பதக்கம் வென்ற சுபேதார் ஆரோக்கிய ராஜீவ் தொடர் ஓட்டப்பந்தயத்தில் கலந்துகொள்கிறார்.

நடை போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற நாய்ப் சுபேதார் இர்பான் ஒலிம்பிக் போட்டியில் 20 கிலோ மீட்டர் நடை போட்டியில் பங்கேற்கிறார்.

மெட்ராஸ் ரெஜிமெண்ட் பயிற்சி மைய கமாண்டன்ட் பிரிகேடியர் ராஜேஸ்வர் சிங் மற்றும் அதிகாரிகள் ஒத்துழைப்புடன் பயிற்சியாளர் மூலம் 2 வீரர்களின் தன்னம்பிக்கை, விடா முயற்சியுடன் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்று ராணுவத்துக்கும், இந்தியாவுக்கும் பெருமை சேர்த்து உள்ளனர். 

குன்னூர் வாலிபர் பகுத்தாய்வாளராக தேர்வு

ஊட்டி,  குன்னூர் காந்திபுரம் பகுதியை சேர்ந்தவர் சின்னசாமி. இவர் தேயிலை தொழிற்சாலையில் சுமை தூக்கும் தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். அவரது மகன் அசோக்குமார் (வயது 30). இவர் ஆக்கி நீலகிரிஸ் அணியில் பங்கேற்று, மாநில அளவில் நடந்த போட்டிகளில் தேர்வு பெற்று இருந்தார்.

இந்த நிலையில் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற உள்ள ஒலிம்பிக் ஆக்கி போட்டியில் கலந்துகொள்ளும் இந்திய அணி வீரர்களுடன் வீடியோ அனலிஸ்ட்டாக (அதாவது காணொளி பகுத்தாய்வாளராக) தேர்வாகி உள்ளார். நடுத்தர குடும்பத்தை சார்ந்த அசோக்குமார் ஒலிம்பிக் போட்டியில் தேர்வானதை தொடர்ந்து, நீலகிரி ஆக்கி விளையாட்டு வீரர்கள், அவருக்கு பாராட்டு தெரிவித்து உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. ஒலிம்பிக் போட்டிக்கு 228 பேர் கொண்ட இந்திய அணி செல்கிறது வீரர்களுடன் கலந்துரையாடி உற்சாகப்படுத்தினார், மோடி
டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு 228 பேர் கொண்ட இந்திய அணி செல்கிறது. வீரர், வீராங்கனைகளுடன் பிரதமர் மோடி காணொலி வாயிலாக கலந்துரையாடி உற்சாகப்படுத்தினார்.