மாவட்ட செய்திகள்

சந்தன மரத்தை வெட்ட முயன்ற 4 பேருக்கு ரூ40 ஆயிரம் அபராதம் + "||" + 4 persons fined Rs 40000 for attempting to cut sandalwood

சந்தன மரத்தை வெட்ட முயன்ற 4 பேருக்கு ரூ40 ஆயிரம் அபராதம்

சந்தன மரத்தை வெட்ட முயன்ற 4 பேருக்கு ரூ40 ஆயிரம் அபராதம்
சந்தன மரத்தை வெட்ட முயன்ற 4 பேருக்கு ரூ40 ஆயிரம் அபராதம்
இடிகரை

கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள  கட்டாஞ்சிமலை வனப்பகுதியில் வனத்துறையினர்  தொடர் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று அதிகாலை ஒரு மணியளவில் நாயக்கன்பாளையம் வடக்கு வனப்பகுதியில் வெளிச்சம் காணப்பட்டது.

 உடனே அங்கு பெரியநாயக்கன்பாளையம் வனச்சரக  அதிகாரி செல்வராஜ் தலைமையில் வனவர்கள் முத்து, மதுசூதனன், கல்யாணசுந்தரம், தாமஸ், வனக்காவலர்கள் மோகன்ராஜ், தினேஷ், சதீஷ், உமாசங்கரன் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள்சென்று பார்த்தனர். அப்போது அங்கு வனப்பகுதியை ஒட்டிய பட்டா நிலத்தில் 4 நபர்கள் சந்தன மரம் வெட்ட முயற்சி செய்து கொண்டிருப்பது தெரியவந்தது.  

விசாரணையில் அவர்கள் வயநாடு மாவட்டத்தை ஜாலி ஜேக்கப் (வயது55),  மன்னார்காடு பகுதியை சேர்ந்த  மொய்தீன் (44), நரசிம்மநாயக்கன்பாளையம் நாகாலம்மன் நகரைச் சேர்ந்த கோபால் ஜெகதீஷ் (54), மேட்டுப்பாளையம் சுண்டப்பட்டியை சேர்ந்த ராஜேந்திரன் (36) என்பது தெரியவந்தது. இந்த 4 பேருக்கும் தலா ரூ.10 ஆயிரம் வீதம் ரூ.40 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
----------