மாவட்ட செய்திகள்

ஆரம்ப சுகாதார நிலையங்களில் சப் கலெக்டர் திடீர் ஆய்வு + "||" + Sub collector surprise inspection at primary health centers

ஆரம்ப சுகாதார நிலையங்களில் சப் கலெக்டர் திடீர் ஆய்வு

ஆரம்ப சுகாதார நிலையங்களில் சப் கலெக்டர் திடீர் ஆய்வு
ஆரம்ப சுகாதார நிலையங்களில் சப் கலெக்டர் திடீர் ஆய்வு
பொள்ளாச்சி

ஆனைமலையில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சப்-கலெக்டர் தாக்கரே சுபம் ஞான தேவ்ராவ் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். 

அங்கு கழிப்பிடம், தொட்டி சுத்தம் இருப்பதை பார்த்த சப்-கலெக்டர் அதிகாரிகளிடம் உடனடியாக அவற்றை சுத்தம் செய்வதற்கு உத்தரவிட்டார்.  மேலும் கட்டிட வசதிகள், அடிப்படை வசதிகள் உள்ளதா? என்பது ஆய்வு நடத்தப்பட்டது. 

இதற்கிடையில் கொரோனா 3-வது அலையை சமாளிக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கூடுதலாக படுக்கை வசதிகள் அமைக்கப்பட்டு உள்ளதா? என்று சப்-கலெக்டர் ஆய்வு செய்தார்.  

இதேபோன்று பெரியபோது ஆரம்ப சுகாதார நிலையத்தில் சப்-கலெக்டர் தாக்கரே சுபம் ஞான தேவ்ராவ் அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்தார்.

 அப்போது அவர் நோயாளிகளிடம் சிகிச்சை முறைகள் குறித்து கேட்டறிந்தார். ஆய்வின் போது உதவி கலெக்டர் (பயிற்சி) சரண்யா மற்றும் டாக்டர்கள் உடன் இருந்தனர்.