மாவட்ட செய்திகள்

காட்டுயானைகள் ஊருக்குள் புகுந்ததை அறிவிக்கும் எச்சரிக்கை கருவிகள் + "||" + Warning devices announcing the entry of wild elephants into the city

காட்டுயானைகள் ஊருக்குள் புகுந்ததை அறிவிக்கும் எச்சரிக்கை கருவிகள்

காட்டுயானைகள் ஊருக்குள் புகுந்ததை அறிவிக்கும் எச்சரிக்கை கருவிகள்
காட்டுயானைகள் ஊருக்குள் புகுந்ததை அறிவிக்கும் எச்சரிக்கை கருவிகள்.
பந்தலூர்,

பந்தலூர் தாலுகா பிதிர்காடு வனச்சரகத்துக்கு உட்பட்ட பிதிர்காடு, பாட்டவயல், கரும்பமூலா, ஓர்கடவு, விலங்கூர், அய்யன்கொல்லி, கோட்டப்பாடி, எடத்தால் உள்பட பல்வேறு பகுதிகளில் காட்டுயானைகள் நடமாட்டம் காணப்படுகிறது.

இந்த நிலையில் அங்கு காட்டுயானைகள் ஊருக்குள் நுழைந்ததை அறிவிக்கும் எச்சரிக்கை கருவிகள் பொருத்த கூடலூர் வன அலுவலர் ஓம்கார் உத்தரவிட்டார்.

அதன்படி பிதிர்காடு வனச்சரகர் மனோகரன் தலைமையில் வனவர்கள் பரமேஸ்வரன், மான்பன், வனகாப்பாளர்கள் ராமச்சந்திரன், மோகன்குமார், நந்தகுமார் மற்றும் வனத்துறையினர் நேரில் சென்று எச்சரிக்கை கருவிகளை பொருத்தினர். காட்டுயானைகள் ஊருக்குள் நுழைந்தால் அந்த கருவியில் இருந்து எச்சரிக்கை அலாரம் ஒலிக்கும். இதன் மூலம் பொதுமக்கள் விழிப்புடன் இருக்கலாம் என்று வனத்துறையினர் தெரிவித்தனர்.

அதிகம் வாசிக்கப்பட்டவை