மாவட்ட செய்திகள்

கழை கூத்து கலைஞர்களுக்கு சாதி சான்றிதழ் + "||" + Certificate

கழை கூத்து கலைஞர்களுக்கு சாதி சான்றிதழ்

கழை கூத்து கலைஞர்களுக்கு சாதி சான்றிதழ்
20 ஆண்டுகளுக்கு பிறகு கழை கூத்து கலைஞர்களுக்கு சாதி சான்றிதழ்களை கலெக்டர் வழங்கினார்.
சிவகங்கை,

குஜராத் மாநிலத்தை சேர்ந்த தொம்ரா என்ற இன மக்கள் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக தமிழகத்தில் தங்கியிருந்து கயிறு மீது நடப்பது, தெருக்கூத்து, சாட்டையை உடம்பில் அடித்துக்கொள்ளுதல், பாம்பு மற்றும் விலங்குகள் வைத்து குழந்தைகளுக்கான வித்தைக்காட்டுதல் போன்ற தொழில் செய்து வருகின்றனர். இவர்கள் பல ஆண்டுகளாக தங்களுக்கு சாதி சான்றிதழ் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து வந்தனர். இதன் அடிப்படையி்ல் இவர்களுக்கு சாதிச்சான்று மற்றும் இலவச வீட்டுமனைப்பட்டா வழங்கும் நிகழ்ச்சி சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் மதுசூதன்ரெட்டி. தலைமை தாங்கி கழை கூத்து கலைஞர்கள் 25 பேருக்கு தொம்ரா என்ற சாதி சான்றிதழை வழங்கினார்.பின்னர் அவர் கூறும் போது,
கழை கூத்தாடிகள் சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் சுமார் 100 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அதேபோல் சிங்கம்புணரி பகுதியில் 25 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.இவர்கள் அனைவருக்கும் சாதிச்சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
அதேபோல் இவர்களுக்கு சொந்தமாக அரசு வீட்டுமனை வழங்கும் வகையில் இடங்கள் தேர்வு செய்யப்பட்டு முதல் கட்டமாக மானாமதுரை தாலுகாவில் சன்னதி புதுக்குளம் பகுதியில் 11 குடும்பங்களுக்கு தலா 3 சென்ட் வீதம் வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டுள்ளது என்றார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் மணிவண்ணன் கலெக்டரின் நேர்முக உதவியாளர் சவுந்தரராஜன், மானாமதுரை தாசில்தார் தமிழரசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்

1. சான்றிதழ்களில் தந்தை பெயருடன் தாயார் பெயரையும் சேர்க்க உத்தரவிட வேண்டும்; ஐகோர்ட்டில் வழக்கு
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரைச் சேர்ந்த வக்கீல் ராம்குமார் ஆதித்தன் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
2. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 5015 பேருக்கு சிறு குறு விவசாயி சான்றிதழ்
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 5015 பேருக்கு சிறு குறு விவசாயி சான்றிதழ் கலெக்டர் ஸ்ரீதர் தகவல்
3. மாணவர்களுக்கு பிளஸ்-2 மதிப்பெண் தற்காலிக சான்றிதழ்
அரியலூர் மாவட்டத்தில் பிளஸ்-2 மதிப்பெண் தற்காலிக சான்றிதழை மாணவர்கள் இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்தனர்.
4. வெற்றி பெற்ற வேட்பாளருக்கு சான்றிதழ்
காரைக்குடி தொகுதியில் வெற்றி பெற்ற வேட்பாளருக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.
5. வெற்றி சான்றிதழ்
அ.தி.மு.க. வேட்பாளர் ராஜன் செல்லப்பாவிற்கு தேர்தல் நடத்தும் அலுவலர் முருகேஸ்வரி வெற்றி சான்றிதழ் வழங்கினார்.