மாவட்ட செய்திகள்

கர்நாடகத்தில் புதிதாக 1,639 பேருக்கு கொரோனா + "||" + corona case update in karnataka

கர்நாடகத்தில் புதிதாக 1,639 பேருக்கு கொரோனா

கர்நாடகத்தில் புதிதாக 1,639 பேருக்கு கொரோனா
கர்நாடகத்தில் புதிதாக 1,639 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
பெங்களூரு: கர்நாடகத்தில் புதிதாக 1,639 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
கர்நாடக அரசின் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

கொரோனா பாதிப்பு

கர்நாடகத்தில் நேற்று 1 லட்சத்து 52 ஆயிரத்து 714 பரிசோதனைகள் செய்யப்பட்டன. இதில் 1,639 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 28 லட்சத்து 88 ஆயிரத்து 341 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் தொற்றுக்கு மேலும் 36 பேர் உயிரிழந்தனர். இதனால் கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 36 ஆயிரத்து 262 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் மருத்துவ சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை 25 ஆயிரத்து 645 ஆக குறைந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 2,214 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர். இதனால் மாநிலத்தில் குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 28 லட்சத்து 26 ஆயிரத்து 411 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பு விகிதம் 1.07 ஆக உள்ளது.

36 பேர் உயிரிழந்தனர்

புதிதாக அதிகபட்சமாக பெங்களூரு நகரில் 419 பேர், தட்சிண கன்னடாவில் 190 பேர், ஹாசனில் 141 பேர், மைசூருவில் 160 பேர், உடுப்பியில் 104 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 18 மாவட்டங்களில் வைரஸ் தொற்று பாதிப்பு 50-க்கும் கீழ் குறைந்துள்ளது. பீதர், யாதகிரியில் புதிதாக யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. கொரோனாவுக்கு பெங்களூரு நகரில் 7 பேர், தட்சிண கன்னடாவில் 6 பேர், ஹாசன், கோலாரில் தலா 3 பேர் உள்பட மொத்தம் 36 பேர் உயிரிழந்தனர். 12 மாவட்டங்களில் உயிரிழப்பு ஏற்படவில்லை.
இவ்வாறு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.