மாவட்ட செய்திகள்

சேலம் மாவட்டத்தில் இதுவரை கருப்பு பூஞ்சைக்கு 401 பேர் பாதிப்பு + "||" + So far 401 people have been affected by black fungus in Salem district

சேலம் மாவட்டத்தில் இதுவரை கருப்பு பூஞ்சைக்கு 401 பேர் பாதிப்பு

சேலம்  மாவட்டத்தில் இதுவரை கருப்பு பூஞ்சைக்கு 401 பேர் பாதிப்பு
சேலம் மாவட்டத்தில் இதுவரை கருப்பு பூஞ்சை நோய்க்கு 401 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சேலம்:
சேலம் மாவட்டத்தில் இதுவரை கருப்பு பூஞ்சை நோய்க்கு 401 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கருப்பு பூஞ்சை
சேலம் மாவட்டத்தில் கொரோனாவின் தாக்கம் குறைந்து வருகிறது. மாவட்டத்தில் கொரோனாவின் பாதிப்பு 92 ஆயிரத்தை தாண்டியது. மேலும் கொரோனாவுக்கு 1,530 பேர் வரை பலியாகி உள்ளனர். தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், அதில் இருந்து குணமடைந்தவர்கள் உள்பட சிலர் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
மாவட்டத்தில் நேற்று முன்தினம் கருப்பு பூஞ்சைக்கு மேலும் 2 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
401 பேர் பாதிப்பு
இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-
சேலம் மற்றும் பிற மாவட்டங்களை சேர்ந்த 401 பேர் கருப்பு பூஞ்சை நோய்க்கு இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 250-க்கும் மேற்பட்டவர்கள் ஆஸ்பத்திரிகளில் குணமடைந்து வீடு திரும்பினர்.
சேலம் அரசு ஆஸ்பத்திரியில் 95 பேரும், மற்றவர்கள் தனியார் ஆஸ்பத்திரிகளிலும் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் கருப்பு பூஞ்சை நோய்க்கு 6 பேர் பலியாகி உள்ளனர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.