மாவட்ட செய்திகள்

ஸ்ரீவைகுண்டம் அருகே விவசாயி தற்கொலை + "||" + farmer commits suicide near srivaikuntam

ஸ்ரீவைகுண்டம் அருகே விவசாயி தற்கொலை

ஸ்ரீவைகுண்டம் அருகே விவசாயி தற்கொலை
ஸ்ரீவைகுண்டம் அருகே விவசாயி தற்கொலை செய்து கொண்டார்
ஸ்ரீவைகுண்டம்:
ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள அணியாபரநல்லூர் கீழத்தெருவை சேர்ந்தவர் மூக்கன் (வயது 55). விவசாயி. இவரது மகன் துரைப்பாண்டி மற்றும் குடும்பத்தினர் தோட்டத்தில் மல்லிகை பூ பறித்து வியாபாரம் செய்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் மல்லிகை பூ பறிப்பதற்காக தோட்டத்திற்கு மூக்கன் வந்தார். சிறிது நேரம் கழித்து தனது மகன் துரைப்பாண்டியும் குடும்பத்தினரும் பூ பறிக்க சென்றனர். இந்த நிலையில் தோட்டத்திலுள்ள மோட்டார் அறையில் இருந்த பூச்சி மருந்தை எடுத்து முருகன் குடித்து மயங்கியுள்ளார். இதை பார்த்த குடும்பத்தினர் அவரை மீட்டு ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின், அவரை மேல்சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை  பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து ஸ்ரீவைகுண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.