மாவட்ட செய்திகள்

கந்து வட்டி வசூல் செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை போலீஸ் சூப்பிரண்டு ஜியாவுல்ஹக் எச்சரிக்கை + "||" + Strict action against interest collectors Police Superintendent Ziaul Haq warned

கந்து வட்டி வசூல் செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை போலீஸ் சூப்பிரண்டு ஜியாவுல்ஹக் எச்சரிக்கை

கந்து வட்டி வசூல் செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை போலீஸ் சூப்பிரண்டு ஜியாவுல்ஹக் எச்சரிக்கை
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கந்து வட்டி வசூல் செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் சூப்பிரண்டு ஜியாவுல்ஹக் தெரிவித்துள்ளார்
கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜியாவுல்ஹக் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

அடியாட்கள் மூலம் மிரட்டல்

தமிழகத்தில் கந்துவட்டி கொடுமையால் ஏராளமான குடும்பங்கள் பாதிக்கப்படும் சம்பவங்கள் தொடர்ந்து வருவது வேதனையை ஏற்படுத்தியுள்ளது. நடுத்தர மற்றும் சாதாரண குடும்பத்தை சேர்ந்த பொதுமக்கள் தங்கள் அவசர தேவைகளுக்கு தெரிந்த நபர்களிடம் கடன் வாங்குவது உண்டு. 

அதுபோன்ற சம்பவங்களை பயன்படுத்திக்கொள்ளும் உள்ளூர் முதலாளிகள், கடுமையான வட்டியுடன் சம்பந்தபட்டவர்களிடம் பணம் வசூல் செய்வதாக தகவல் வந்துள்ளது. ஏற்கனவே வறுமை நிலையில் இருக்கும் சாதாரண குடும்பத்து மக்கள் கந்து வட்டியால் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். இதனை வசூலிக்க அடியாட்கள் மூலம் மிரட்டல் மற்றும் தில்லு முல்லு வேலைகளில் முதலாளிகள் ஈடுபடுகின்றனர். 

கடும் நடவடிக்கை

இது போன்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது சட்டத்தின் மூலம் நடவடிக்கை எடுக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி வட்டி வசூல் செய்பவர்கள் தங்களிடம் பணம் பெற்றவர்களிடமிருந்து சட்டத்திற்கு புறம்பாக அவர்களுக்கு சொந்தமான அசையும் மற்றும் அசையா சொத்துக்களை கைப்பற்றியிருந்தால், அதை மீட்டு அவர்களிடமே ஒப்படைக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. 

எனவே கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கந்து வட்டியால் பாதிக்கப்பட்ட பொது மக்கள் எந்தவித அச்சமும் இன்றி சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகளை அணுகி தக்க நிவாரணம் பெறும்படியும், இதுபோன்று கந்து வட்டியில் பணம் வசூல் செய்பவர்கள் மீது சட்ட ரீதியான கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

1. கனமழை எச்சரிக்கை: மேற்கு வங்காளத்தில் அனைத்து அரசு ஊழியர்களின் விடுமுறை ரத்து
மேற்கு வங்காளத்தில் கனமழை எச்சரிக்கையை அடுத்து அனைத்து அரசு ஊழியர்களின் விடுமுறை ரத்து செய்யப்பட்டு உள்ளது.
2. இந்தியாவுக்குள் ஆப்கானிஸ்தான் பயங்கரவாதிகள் ஊடுருவல்...? உளவு துறை எச்சரிக்கை
இந்தியாவுக்குள் பண்டிகையை முன்னிட்டு ஆப்கானிஸ்தான் பயங்கரவாதிகள் ஊடுருவி தாக்குதல் நடத்த கூடும் என உளவு துறை எச்சரிக்கை விடுத்து உள்ளது.
3. சென்னையில் உரிமம் பெறாத மகளிர் விடுதிகள் மீது கடும் நடவடிக்கை; கலெக்டர் எச்சரிக்கை
சென்னையில் உரிமம் பெறாமல் செயல்பட்டு வரும் மகளிர் விடுதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.
4. சட்டவிரோதமாக பட்டாசு தயாரிப்போர் மீது குண்டர் சட்டம் பாயும்-கலெக்டர் எச்சரிக்கை
விருதுநகர் மாவட்டத்தில் சட்டவிரோதமாக பட்டாசு தயாரிப்போர் மீது குண்டர் சட்டம் பாயும் என்று கலெக்டர் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.
5. டெல்லிக்கு ஆரஞ்ச் எச்சரிக்கை; இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
டெல்லியில் பெய்து வரும் மழையை தொடர்ந்து இந்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்ச் எச்சரிக்கை விடுத்துள்ளது.