மாவட்ட செய்திகள்

வந்தவாசி போலீஸ் நிலையம் முற்றுகை + "||" + Siege of Vandavasi police station

வந்தவாசி போலீஸ் நிலையம் முற்றுகை

வந்தவாசி போலீஸ் நிலையம் முற்றுகை
வந்தவாசி போலீஸ் நிலையத்தை மனிதநேய மக்கள் கட்சியினர் முற்றுகையிட்டனர்.
வந்தவாசி

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியில் கடந்த 20 நாட்களுக்கு முன்பு த.மு.மு.க.வை சேர்ந்த இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். 

இருதரப்பினர் மீதும் வழக்குப்பதிவு செய்த போலீசார் ஒரு தரப்பினரை மட்டும் கைது செய்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் பக்ரீத் பண்டிகை தினமான நேற்றுமுன்தினம் அதிகாலை 3 மணி அளவில் மனிதநேய மக்கள் கட்சியை சேர்ந்த ஒருவரை கைது செய்ய சென்றுள்ளனர். 

இதனால் ஆத்திரமடைந்த மனிதநேய மக்கள் கட்சியினர், தங்களை போலீசார் அச்சுறுத்துவதாக கூறி வந்தவாசி போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு கோஷங்கள் எழுப்பினர்.

மாவட்ட தலைவர் ஜமால், நகர செயலாளர் ரபி, த.மு.மு.க. நகர செயலாளர் ஜீலானி, அக்பர், சதாம் உசேன் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். 

அவர்களுடன் துணை போலீஸ் சூப்பிரண்டு விஸ்வேஸ்வரய்யா, இன்ஸ்பெக்டர் குமார் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தை கைவிட செய்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. லாலாபேட்டை போலீஸ் நிலையம் முற்றுகை
கொலை வழக்கு தொடர்பாக விசாரணைக்கு அழைத்து சென்றவரை விடுதலை செய்யக்கோரி லாலாபேட்டை போலீஸ் நிலையத்தை அவரது உறவினர்கள் முற்றுகையிட்டனர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
2. நீர்நிலைகளை ஆக்கிரமித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போலீஸ் நிலையம் முற்றுகை - 30 பேர் மீது வழக்கு
நீர்நிலைகளை ஆக்கிரமித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போலீஸ் நிலையம் முற்றுகையிடப்பட்டது.
3. ஸ்ரீமுஷ்ணம் அருகே கிணற்றில் மாணவர் பிணம்: உடலை வாங்க மறுத்து போலீஸ் நிலையத்தை உறவினர்கள் முற்றுகை
ஸ்ரீமுஷ்ணம் அருகே கிணற்றில் மாணவர் பிணமாக கிடந்த நிலையில் அவரது உடலை வாங்க மறுத்து போலீஸ் நிலையத்தை உறவினர்கள் முற்றுகை யிட்டனா்.