மாவட்ட செய்திகள்

தீக்காயம் அடைந்த மூதாட்டி சாவு + "||" + Death

தீக்காயம் அடைந்த மூதாட்டி சாவு

தீக்காயம் அடைந்த மூதாட்டி சாவு
தீக்காயம் அடைந்த மூதாட்டி பரிதாபமாக இறந்தார்.
தோகைமலை
தோகைமலை அருகே உள்ள நவலக்காம்பட்டியை சேர்ந்த ஆண்டி மனைவி செல்லம்மாள் (வயது 60). இவர் நேற்று முன்தினம் தனது வீட்டிற்கு வெளியே விறகு அடுப்பில் சமைத்து கொண்டிருந்தார். அப்போது தீ அணைந்ததால், மண்எண்ணெய்யை எடுத்து அடுப்பில் ஊற்றினார். அப்போது எதிர்பாராத விதமாக செல்லம்மாளின் சேலையில் தீ பட்டு உடல் முழுவதும் பரவியது. இதனால் தீக்காயம் அடைந்த அவரை அங்கிருந்தவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று செல்லம்மாள் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து  செல்லம்மாள் மகன் பாலு கொடுத்த புகாரின்பேரில்,  தோகைமலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பரமேஸ்வரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

தொடர்புடைய செய்திகள்

1. தந்தையின் இறுதிச்சடங்கில் ஆட்டோ டிரைவர் சாவு
பண்ருட்டி அருகே தந்தையின் இறுதிச்சடங்கில் ஆட்டோ டிரைவர் இறந்தார்.
2. மயங்கி கிடந்த டெய்லர் சாவு
விருதுநகரில் மயங்கி கிடந்த டெய்லர் பரிதாபமாக இறந்தார்.
3. கிரேன் மோதி முதியவர் பலி
சிவகாசியில் கிரேன் மோதி வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.
4. கிணற்றில் முதியவர் பிணம்
சிவகாசி அருகே கிணற்றில் முதியவர் பிணம் கண்டெடுக்கப்பட்டது.
5. லாரி டிரைவர் திடீர் சாவு
லாாி டிரைவர் திடீரென இறந்தார்.