மாவட்ட செய்திகள்

எஸ்.ஆர்.எம்.யூ. தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் + "||" + SRMU Trade union demonstration

எஸ்.ஆர்.எம்.யூ. தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

எஸ்.ஆர்.எம்.யூ. தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
மத்திய அரசை கண்டித்து எஸ்.ஆர்.எம்.யூ. தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பழனி:

எஸ்.ஆர்.எம்.யூ. தொழிற்சங்கத்தின் பழனி கிளை சார்பில், பழனி ரெயில்நிலையத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு கிளை செயலாளர் தண்டபாணி தலைமை தாங்கினார். தலைவர் நாசர்தீன், பொருளாளர் கில்பர்ட் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

ஆர்ப்பாட்டத்தின்போது தொலைபேசி ஒட்டு கேட்பு விவகாரம் மற்றும் ராணுவ தளவாடங்களை தயாரிக்கும் நிறுவனங்களை தனியாருக்கு தாரைவார்க்கும் மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் தொழிற்சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர்.