மாவட்ட செய்திகள்

த.வா.க. பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு + "||" + Petrol bombing

த.வா.க. பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு

த.வா.க. பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு
கடலூரில் தமிழக வாழ்வுரிமை கட்சி பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் தொடா்பாக தி.மு.க. நிா்வாகி உள்பட 5 போ் மீது போலீசாா் வழக்குப்பதிவு செய்துள்ளனா்.
கடலூர், 

கடலூர் மஞ்சக்குப்பம் செந்தாமரைநகரை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 40), தமிழக வாழ்வுரிமை கட்சியின் நகர தொழிற்சங்க தலைவராக உள்ளார். இவர் நேற்று முன்தினம் இரவு தனது வீட்டில் குடும்பத்தினருடன் தூங்கிக் கொண்டிருந்தார். இந்த நிலையில் நள்ளிரவு நேரத்தில் அவரது வீட்டின் முன்பு பயங்கர சத்தம் கேட்டது.
இந்த சத்தம் கேட்டு எழுந்த சுரேஷ் மற்றும் அவரது குடும்பத்தினர் வீட்டின் வெளியே வந்து பார்த்தனர். அப்போது வீட்டின் முன்பு புகை மண்டலமாக காட்சி அளித்தது. மேலும் வீட்டின் சுவர் மற்றும் தரையில் தீப்பிடித்து எரிந்ததற்கான அடையாளங்கள் இருந்தது. அப்போது தான் யாரோ மர்மநபர்கள் வீட்டின் மீது பெட்ரோல் குண்டை வீசி விட்டு தப்பிச் சென்று விட்டது தெரியவந்தது.

பரபரப்பு

இதற்கிடையே இதுபற்றி தகவல் அறிந்த த.வா.க. மாவட்ட செயலாளர் ஆனந்த் மற்றும் கட்சியினர் நேற்று காலை சுரேஷ் வீட்டின் முன்பு திரண்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்த புதுநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் தடயவியல் நிபுணர்கள் விரைந்து வந்து, சுரேசின் வீட்டில் தடயங்களை சேகரித்து சென்றனர். இதுகுறித்த புகாரின் பேரில் கடலூர் புதுநகர் போலீசார் விசாரணை நடத்தினா். 

5 போ் மீது வழக்கு

விசாரணையில் சுரேசின் உறவினா் ஜீவா என்பவா் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளாா். இதுதொடா்பாக அவரை போலீசாா் கைது செய்துள்ளனா். இந்த நிலையில் ஜீவா கஞ்சா விற்றது குறித்து தி.மு.க. நகர இளைஞரணி துணை அமைப்பாளா் பாஸ்கா்(40) தான் போலீசுக்கு தகவல் கொடுத்ததாக நினைத்த சுரேஷ், அவாிடம் தகராறில் ஈடுபட்டுள்ளாா். இதனால் தான் அவா் தனது கூட்டாளிகள் கடலூா் மஞ்சக்குப்பம் பகுதியை சோ்ந்த கமல், முகுந்தன், விஷ்வா, செங்கல்பட்டை சோ்ந்த அஜய் ஆகியோருடன் சோ்ந்து சுரேஷ் வீட்டு ஜன்னலில் பெட்ரோல் குண்டு வீசியது தொியவந்தது. இதையடுத்து பாஸ்கா் உள்ளிட்ட 5 போ் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. பெட்ரோல், டீசல் விலை 100 ரூபாயை கடந்ததையும் பிரதமர் கொண்டாட வேண்டும் - ப.சிதம்பரம்
பெட்ரோல், டீசல் விலை 100 ரூபாயை கடந்ததையும் பிரதமர் கொண்டாட வேண்டும் என மத்திய முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
2. அக்டோபர் 25: இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
சென்னையில் இன்று பெட்ரோல் லிட்டருக்கு 104.52 ரூபாய்க்கும், டீசல் லிட்டருக்கு 100.59 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
3. வரலாறு காணாத அளவுக்கு பெட்ரோல், டீசல் விலை உயர்வு
ஒரே வாரத்தில் 5-வது முறையாக பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டு உள்ளது. மும்பையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.113.46-க்கு விற்கப்படுகிறது.
4. இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
சென்னையில் இன்று பெட்ரோல் லிட்டருக்கு ரூ.104.52 ஆகவும், டீசல் லிட்டருக்கு ரூ.100.59 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
5. பெட்ரோல் விலையை தொடர்ந்து டீசல் விலையும் 100-ஐ தாண்டியது!
தொடரும் உச்சமாக, சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.104.22 காசுகளுக்கு இன்று விற்பனை செய்யப்பட்டு வருகிறது.