மாவட்ட செய்திகள்

அங்கன்வாடி பெண் ஊழியர், கல்லால் அடித்துக் கொலை + "||" + Beaten to death

அங்கன்வாடி பெண் ஊழியர், கல்லால் அடித்துக் கொலை

அங்கன்வாடி பெண் ஊழியர், கல்லால் அடித்துக் கொலை
திருச்சுழி அருகே அங்கன்வாடி பெண் ஊழியர், கல்லால் அடித்துக் கொலை செய்யப்பட்டார்.
காரியாபட்டி, 
திருச்சுழி அருகே அங்கன்வாடி பெண் ஊழியர், கல்லால் அடித்துக் கொலை செய்யப்பட்டார். 
அங்கன்வாடி ஊழியர் 
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி ஒன்றியத்திற்கு உட்பட்ட பூலாங்கால் கிராமத்தை சேர்ந்தவர் சரோஜா (வயது 45).  இவர் கீழ பூலாங்கால் கிராமத்திலுள்ள அங்கன்வாடி மையத்தில் சமையலராக பணியாற்றி வந்தார். 
இவர் நேற்று அதே கிராமத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்காக சென்றுள்ளார். அங்கு வந்த பூலாங்கால் கிராமத்தை சேர்ந்த அஷ்ணம்மாள் (52) என்ற பெண்ணுக்கும், சரோஜாவிற்கும்  இடையே வாய் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அங்கே இருந்தவர்கள் சத்தம் போடவும் இருவரும் அவரவர் வீட்டிற்கு சென்று விட்டனர்.
கல்லால் தாக்கி கொலை 
பின்னர் சரோஜா, அஷ்ணம்மாள் வீட்டிற்கு சென்று ஏன் என்னை மருத்துவமனையில் வைத்து திட்டினாய்? என்று கேட்டபோது இருவருக்கும் இடையே மீண்டும் வாய்த்தகராறு ஏற்பட்டு கைகலப்பாக மாறியதாக கூறப்படுகிறது.
இதில் அஷ்ணம்மாள், சரோஜாவை கல்லால் தாக்கியதாக கூறப்படுகிறது.
இதில் சரோஜா பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
போலீசார் விசாரணை 
இதுகுறித்து தகவல் அறிந்த பரளச்சி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சரோஜாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து பரளச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. அண்ணன் கம்பால் அடித்துக்கொலை; தம்பி கைது
அண்ணனை கம்பால் அடித்துக் கொலை செய்த தம்பி கைது செய்யப்பட்டார்.
2. நண்பர்களுடன் பிறந்தநாள் கொண்டாடிய பெயிண்டர் அடித்துக் கொலை
திசையன்விளையில் நண்பர்களுடன் பிறந்தநாள் கொண்டாடிய பெயிண்டர் இரும்பு கம்பியால் அடித்துக்கொலை செய்யப்பட்டார்.
3. தொழிலாளி அடித்துக் கொலை
ஆலங்குளம் அருகே சொத்து தகராறில் தொழிலாளி அடித்துக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அவருடைய தம்பி உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
4. ஆடுகளை நாய் கடித்ததால் தகராறு; தொழிலாளி அடித்துக் கொலை
நெல்லை அருகே ஆடுகளை நாய் கடித்து கொன்றதில் ஏற்பட்ட தகராறு காரணமாக தொழிலாளி அடித்துக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக 2 சிறுவர்கள் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
5. நிலத்தகராறில் விவசாயி அடித்துக்கொலை
பனவடலிசத்திரம் அருகே, நிலத்தகராறில் விவசாயி அடித்துக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக டிரைவர் போலீசில் சரண் அடைந்தார்.