மாவட்ட செய்திகள்

கீழ்க்கட்டளை ஏரிக்கரையில் இருந்த அம்மன் சிலையை அகற்றியதை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் + "||" + Public road blockade condemning the removal of the goddess statue on the lower command lake

கீழ்க்கட்டளை ஏரிக்கரையில் இருந்த அம்மன் சிலையை அகற்றியதை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்

கீழ்க்கட்டளை ஏரிக்கரையில் இருந்த அம்மன் சிலையை அகற்றியதை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்
கீழ்க்கட்டளை ஏரிக்கரையில் இருந்த அம்மன் சிலையை பல்லாவரம் நகராட்சி அதிகாரிகள், அகற்றியதை கண்டித்து அந்த பகுதி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
ஆலந்தூர்,

சென்னையை அடுத்த கீழ்க்கட்டளை ஏரிக்கரையில் கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு ரேணுகாதேவி அம்மன் சிலையை அப்பகுதியை சேர்ந்த சிலர் பிரதிஷ்டை செய்து வழிபட்டனர். அப்போதே அந்த சிலையை அகற்றி, அதை வைத்தவர்கள் வசம் பல்லாவரம் நகராட்சி அதிகாரிகள் ஒப்படைத்தனர்.

இந்தநிலையில் ஆடி மாதத்தை முன்னிட்டு திடீரென மீண்டும் ஏரிக்கரையில் அதே இடத்தில் அம்மன் சிலையை பிரதிஷ்டை செய்து, பூஜைகள் செய்து அப்பகுதி மக்கள் வழிபட்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் அனுமதி இன்றி நிறுவப்பட்ட அந்த சிலையை பல்லாவரம் நகராட்சி அதிகாரிகள் அகற்றினர்.

ஆனால் சிலையை மீண்டும் அதை வைத்தவர்களிடம் ஒப்படைக்காமல் பம்மல் கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

பொதுமக்கள் சாலை மறியல்

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாக்கியம்மாள் நகர், தேன்மொழி நகரை சேர்ந்த பெண்கள் உள்பட பொதுமக்கள் திடீரென ரேடியல் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்துவந்த மடிப்பாக்கம் போலீசார், இது தொடர்பாக பல்லாவரம் தாசில்தாரிடம் தெரிவித்து உரிய தீர்வு பெற்று கொள்ளுமாறு கூறி சாலை மறியலில் ஈடுபட்டவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். இதனால் அந்த பகுதியில் சிறிதுநேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

1. அய்யப்பன்தாங்கல் ஊராட்சியில் மறுவாக்கு எண்ணிக்கைக்கு எதிர்ப்பு; சுயேச்சை வேட்பாளர் சாலை மறியல்
அய்யப்பன்தாங்கல் ஊராட்சியில் மறுவாக்கு எண்ணிக்கைக்கு எதிர்ப்பு; சுயேச்சை வேட்பாளர் சாலை மறியல்.
2. வாக்காளர்களுக்கு தி.மு.க.வினர் தங்க மூக்குத்தி பரிசு அ.தி.மு.க. சாலை மறியல்
குன்றத்தூர் ஒன்றியத்தில் வாக்காளர்களுக்கு தி.மு.க.வினர் தங்க மூக்குத்தி பரிசாக கொடுத்ததாக கூறி அ.தி.மு.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
3. தி.மு.க. வேட்பாளரை மிரட்டியதாக புகார் முன்னாள் கவுன்சிலரை கைது செய்ய எதிர்ப்பு; அ.தி.மு.க.வினர் சாலை மறியல்
பெரும்பாக்கம் ஊராட்சி மன்ற தேர்தல் பிரசாரத்தின்போது தி.மு.க. வேட்பாளரை மிரட்டிய புகாரில் அ.தி.மு.க. முன்னாள் ஒன்றிய கவுன்சிலரை கைது செய்ய எதிர்ப்பு தெரிவித்து அ.தி.மு.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
4. பஸ் சக்கரத்தில் சிக்கி மாநகராட்சி ஊழியர் பலி உறவினர்கள் சாலை மறியல்
மோட்டார் சைக்கிள் மீது மாநகர பஸ் மோதிய விபத்தில் பஸ்சின் சக்கரத்தில் சிக்கி மாநகராட்சி ஊழியர் பலியானார். இதை கண்டித்து அவரது உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
5. குடிநீரில் கழிவுநீர் கலப்பதை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்
குடிநீரில் கழிவுநீர் கலப்பதை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்.