மாவட்ட செய்திகள்

மாணவி பாலியல் பலாத்கார வழக்கில் போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது + "||" + Student rape: Youth arrested under Pokcho Act

மாணவி பாலியல் பலாத்கார வழக்கில் போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது

மாணவி பாலியல் பலாத்கார வழக்கில் போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது
மாணவி பாலியல் பலாத்கார வழக்கில் போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது செய்யப்பட்டார்.
பாகூர், ஜூலை.
கரையாம்புத்தூர் அடுத்த மணமேடு மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சரண்ராஜ் (வயது 23). இவர், அதே பகுதியில் சி.டி.கடை நடத்தி வருகிறார். இவருக்கும், 17 வயது மாணவிக்கும் இடையே ஏற்பட்ட பழக்கம் காதலாக மாறியது. இதையடுத்து திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி மாணவியை சரண்ராஜ் பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.  இந்தநிலையில் சரண்ராஜ், வேறு ஒரு பெண்ணை காதலிப்பதாகவும் அவரை திருமணம் செய்யப்போவதாகவும் தெரியவந்ததால், மாணவி அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து கரையாம்புத்தூர் புறக்காவல் நிலையத்தில் நேரடியாக சென்று புகார் அளித்தார். 
அதன்பேரில் பாகூர் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான சரண்ராஜை வலைவீசி தேடி வந்தநிலையில் மண்மேடு பாலத்தின் அருகே நின்று கொண்டிருந்த அவரை கைது செய்தனர்.