மாவட்ட செய்திகள்

பர்கூர் மலைப்பகுதியில் மோட்டார்சைக்கிள்- லாரி நேருக்கு நேர் மோதல்; மாணவர் பலி + "||" + accident

பர்கூர் மலைப்பகுதியில் மோட்டார்சைக்கிள்- லாரி நேருக்கு நேர் மோதல்; மாணவர் பலி

பர்கூர் மலைப்பகுதியில் மோட்டார்சைக்கிள்- லாரி நேருக்கு நேர் மோதல்; மாணவர் பலி
பர்கூர் மலைப்பகுதியில் மோட்டார்சைக்கிள் மற்றும் லாரி நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் மாணவர் பரிதாபமாக பலியானார்.
அந்தியூர்
பர்கூர் மலைப்பகுதியில் மோட்டார்சைக்கிள் மற்றும் லாரி நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் மாணவர் பரிதாபமாக பலியானார். 
மாணவர்
அந்தியூரை அடுத்த பர்கூர் மலைப்பகுதியில் உள்ள துருசனாம்பாளையத்தை சேர்ந்தவர் சின்னப்பி. இவருடைய மனைவி சரோஜா. இவர்களுடைய மகன் சித்தேஸ்வரன் (வயது 18). பிளஸ்-2 முடித்து உள்ளார். 
இவர் நேற்று துருசனாம்பாளையத்தில் இருந்து அருகில் ஊசிமலை பகுதிக்கு மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். 
மோதல்
துருசனாம்பாளையம் பஸ் நிறுத்தம் அருகே சென்றபோது அந்த வழியாக வந்த லாரியும், சித்தேஸ்வரனின் மோட்டார்சைக்கிளும் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதிக்கொண்டன. 
இந்த விபத்தில் மோட்டார்சைக்கிளில் இருந்து சித்தேஸ்வரன் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார். மேலும் லாரியின் அடிப்புறத்தில் மோட்டார்சைக்கிள் சிக்கி கொண்டது. விபத்தை கண்டதும் அக்கம் பக்கத்தினர் ஓடிச்சென்று படுகாயம் அடைந்த சித்தேஸ்வரனை மீட்டு சிகிச்சைக்காக அந்தியூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். 
சாவு
ஆனால் செல்லும் வழியிலேயே சித்தேஸ்வரன் பரிதாபமாக இறந்தார். சித்தேஸ்வரனின் உடலை பார்த்து அவருடைய பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இறந்தது. இறந்து போன சித்தேஸ்வரனின் உடலை போலீசார் கைப்பற்றி பிேரத பரிசோதனைக்காக அந்தியூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து பர்கூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தொடர்புடைய செய்திகள்

1. கார்கள் மோதல்; முதியவர் பலி
விருதுநகர் அருகே கார்கள் மோதி கொண்ட விபத்தில் முதியவர் பலியானார். பெண் உள்பட 4 பேர் படுகாயம் அடைந்தனர்.
2. சிவகிரி அருகே கார்-மினி டெம்போ நேருக்கு நேர் மோதி விபத்து - விவசாயி உயிரிழப்பு
சிவகிரி அருகே கார்-மினி டெம்போ மோதிய விபத்தில் விவசாயி உயிரிழந்துள்ளார்.
3. பவானி அருகே சாலையோர மரத்தில் லாரி மோதி விபத்து - டிரைவர் படுகாயம்
பவானி அருகே சாலையோர மரத்தில் லாரி மோதிய விபத்தில் டிரைவர் படுகாயம் அடைந்து உள்ளார்.
4. பாலத்தின் தடுப்பு சுவரில் கார் மோதி விபத்து - ஒருவர் உயிரிழப்பு...!
ராமநாதபுரம் அருகே பாலத்தின் தடுப்பு சுவரில் கார் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
5. கார்கள் நேருக்கு நேர் மோதல்; முதியவர் பலி
கார்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் முதியவர் உயிரிழந்தார்.