மாவட்ட செய்திகள்

பொன்னேரி அருகே ஏரியில் மூழ்கி வாலிபர் பலி + "||" + A youth drowned in a lake near Ponneri

பொன்னேரி அருகே ஏரியில் மூழ்கி வாலிபர் பலி

பொன்னேரி அருகே ஏரியில் மூழ்கி வாலிபர் பலி
பொன்னேரி அருகே ஏரியில் மூழ்கி வாலிபர் பரிதாபமாக இறந்தார்.
பொன்னேரி,

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே தீர்த்தம்கரைபட்டு கிராமத்தில் உள்ள சேரன் தெருவை சேர்ந்தவர் ராகுல் (வயது 21). இவர் தன்னுடைய நண்பர்கள் 5 பேருடன் சோழவரம் பகுதியில் உள்ள பூதூர் ஏரிக்கு குளிக்க சென்றார்.

இந்த ஏரியில் மண் எடுத்து பள்ளம் ஆழமாக இருந்ததில் தண்ணீர் தேங்கி இருந்தது. அதில் குளிக்க சென்ற ராகுல் நீண்ட நேரமாக கரை திரும்பவில்லை. இது குறித்து அவரது நண்பர்கள் சோழவரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

சாவு

சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் ஏரியில் மூழ்கி சேற்றில் சிக்கி இறந்த ராகுல் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து சோழவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. கத்தார் நாட்டில் கடலில் மூழ்கி தந்தை-மகன் பலி
கத்தார் நாட்டில் கடலில் மூழ்கி கும்பகோணத்தை சேர்ந்த தந்தை, மகன் பலியானார்கள். அவர்களது உடல்கள் சொந்த ஊருக்கு கொண்டுவரப்பட்டு தகனம் செய்யப்பட்டன.
2. 8-வது மாடியில் இருந்து தவறி விழுந்து மருத்துவ கல்லூரி மாணவர் பலி
நண்பரின் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் மதுபோதையில் இருந்த மருத்துவ கல்லூரி மாணவர், தனது அறை கதவு மூடி இருந்ததால் பின்பக்க குழாய் வழியாக சென்றபோது 8-வது மாடியில் இருந்து தவறி விழுந்து பலியானார்.
3. படுக்கையில் ‘சார்ஜ்’ போட்டு தூங்கியபோது செல்போன் வெடித்து கல்லூரி மாணவர் பலி
படுக்கையில் ‘சார்ஜ்’ போட்டு தூங்கியபோது செல்போன் வெடித்து கல்லூரி மாணவர் பலி.
4. நாய் குறுக்கே வந்ததால் விபரீதம் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த முதியவர் பலி
திருவள்ளூர் அருகே நாய் குறுக்கே வந்ததால் நிலை தடுமாறி மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி கீழே விழுந்த முதியவர் பலியானார்.
5. 3-வது மாடியில் இருந்து தவறி விழுந்த ரெயில்வே ஊழியர் பலி
திருவொற்றியூரில் 3-வது மாடியில் இருந்து தவறி விழுந்த ரெயில்வே ஊழியர் பலியானார்.