மாவட்ட செய்திகள்

சங்கரய்யாவுக்கு ‘தகைசால் தமிழர்’ விருது; கமல்ஹாசன் வரவேற்பு + "||" + Sankaraiah wins 'Thakaisal Tamil' award; Welcome Kamal Haasan

சங்கரய்யாவுக்கு ‘தகைசால் தமிழர்’ விருது; கமல்ஹாசன் வரவேற்பு

சங்கரய்யாவுக்கு ‘தகைசால் தமிழர்’ விருது; கமல்ஹாசன் வரவேற்பு
சங்கரய்யாவுக்கு ‘தகைசால் தமிழர்’ விருது; கமல்ஹாசன் வரவேற்பு.
ஆலந்தூர்,

ஒளிப்பதிவு சட்ட திருத்த மசோதா குறித்து சசிதரூர் எம்.பி. தலைமையிலான தகவல் தொழில் நுட்பத்துக்கான நாடாளுமன்ற நிலைக்குழு டெல்லியில் கருத்து கேட்பு நடத்தியது. இதில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் நடிகர் கமல்ஹாசன் கலந்து கொண்டு தனது கருத்துகளை தெரிவித்தார்.


பின்னர் டெல்லியில் இருந்து சென்னை திரும்பிய கமல்ஹாசன், சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

டெல்லியில் சினிமா திருத்த சட்டம் குறித்து தந்த மனு பற்றி வெளியே சொல்ல அனுமதி இல்லை. இருந்தாலும் என்னுடைய கருத்து என்னவாக இருக்கும் என தெரிந்தும், அந்த கருத்தை சொல்லுவதற்காக என்னை அழைத்த ஒன்றிய அரசுக்கு என்னுடைய நன்றியை தெரிவித்து கொள்கிறேன். குழுவில் இருந்தவர்கள் பேச்சு சுதந்திரத்தைபோல் சிந்தனை சுதந்திரத்திலும் நம்பிக்கை கொண்டவர்களாக இருந்ததால் எனக்கு நம்பிக்கை அளிக்கிறது.

தி.மு.க.வை கண்டித்து அ.தி.மு.க. போராட்டம் நடத்துவது தொடக்க காலம் முதல் செய்கின்ற வேலை. உள்ளாட்சி தேர்தலுக்கு மக்கள் நீதி மய்யம் தயாராகி கொண்டு இருக்கிறது. இதற்கான எல்லா ஆயத்த ஏற்பாடுகளையும் செய்து வருகிறோம்.

சங்கரய்யாவுக்கு தந்த ‘தகைசால் தமிழர்’ விருது எனக்கு கிடைத்த பெருமையாகவே கருதுகிறேன். தமிழக மக்களுக்கும், தோழர்களுக்கும் கிடைத்த பெருமையாக கருதுகிறேன். 3 மாத தி.மு.க. ஆட்சியை பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். நான் கருத்து சொல்ல விரும்பவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. கமல்ஹாசனின் உடல்நிலை சீராக உள்ளது; மருத்துவமனை நிர்வாகம் தகவல்
கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வரும் நடிகர் கமலின் உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
2. கமல்ஹாசனிடம் தொலைபேசியில் நலம் விசாரித்தார் நடிகர் ரஜினிகாந்த்
கொரோனா பாதித்த கமல்ஹாசன் சென்னையை அடுத்த போரூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
3. கமல்ஹாசன் நலமுடன் உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தகவல்
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கமல்ஹாசன் நலமுடன் உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
4. மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனுக்கு கொரோனா தொற்று
அமெரிக்கப் பயணம் முடிந்து சென்னை திரும்பிய கமல்ஹாசனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
5. அறவழியில் போராடி வென்ற விவசாயிகளுக்கு வாழ்த்துக்கள் - கமல்ஹாசன்
3 வேளாண் சட்டங்களை திரும்ப பெற்றதற்கு கமல்ஹாசன் வரவேற்பு தெரிவித்துள்ளார்.