மாவட்ட செய்திகள்

மின்வயர் அறுந்து கியாஸ் குழாயில் விழுந்ததால் ஓட்டலில் தீ விபத்து + "||" + A fire broke out in a hotel after an electric wire fell on a gas pipe

மின்வயர் அறுந்து கியாஸ் குழாயில் விழுந்ததால் ஓட்டலில் தீ விபத்து

மின்வயர் அறுந்து கியாஸ் குழாயில் விழுந்ததால் ஓட்டலில் தீ விபத்து
மின்வயர் அறுந்து கியாஸ் குழாயில் விழுந்ததால் ஓட்டலில் தீ விபத்து.
ஆலந்தூர்,

சென்னையை அடுத்த ஆதம்பாக்கம் சுரங்கப்பாதை அருகே ஓட்டல் நடத்தி வருபவர் சுப்பராயலு (வயது 60). நேற்று இரவு 9 மணியளவில் இவரது ஓட்டல் பெயர் பலகையில் இருந்த மின்சார வயர் திடீரென அறுந்து விழுந்தது.

அப்போது வெளியில் வைக்கப்பட்டு உள்ள சிலிண்டரில் இருந்து ஓட்டலுக்குள் கியாஸ் கொண்டு செல்லப்படும் குழாயில் மின்வயர் விழுந்ததால் கியாஸ் தீப்பிடித்து குழாய் வழியாக ஓட்டலுக்குள் தீ பரவி ஓட்டல் முழுவதும் தீப்பிடித்து எரிந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அங்கிருந்த ஊழியர்களும், சாப்பிட வந்தவர்களும் அலறி அடித்து வெளியே ஓடிவந்தனர்.

இதுபற்றி தகவல் அறிந்து வந்த கிண்டி தீயணைப்பு நிலைய வீரர்கள் சுமார் 1 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். எனினும் ஓட்டல் முற்றிலும் எரிந்து நாசமானது. இது பற்றி ஆதம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. வேளாண்மை அலுவலகத்தில் தீ விபத்து
கடலூர் வேளாண்மை அலுவலகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.8 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதமானது.
2. புலம் பெயர் தொழிலாளர்களுடன் சென்ற லாரி விபத்து: ஒருவர் பலி, 30 பேர் காயம்
ஜார்க்கண்டில் புலம்பெயர் தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற லாரி சாலையோர மரத்தில் மோதியதில் ஒருவர் பலியானார். 30 பேர் காயமடைந்தனர்.
3. லாரி மீது மினி லாரி மோதி தீ விபத்து; வியாபாரி பலி
சிறுபாக்கம் அருகே லாரி மீது மினிலாரி மோதியதில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் வியாபாரி சிக்கி பரிதாபமாக இறந்தார்.
4. ஓடும் காரில் தீ
ஓடும் காரில் தீப்பிடித்தது.
5. மாங்காடு அருகே அடுத்தடுத்து 3 கடைகளில் பயங்கர தீ விபத்து
மாங்காடு அருகே மரக்கடையில் திடீரென ஏற்பட்ட தீவிபத்து அடுத்தடுத்து 3 கடைகளில் பரவியதால் பல லட்சம் பொருட்கள் எரிந்து நாசமானது.