மாவட்ட செய்திகள்

டிரைவரை தாக்கிய தந்தை-மகன் மீது வழக்கு + "||" + Case

டிரைவரை தாக்கிய தந்தை-மகன் மீது வழக்கு

டிரைவரை தாக்கிய தந்தை-மகன் மீது வழக்கு
இளையான்குடி அருகே டிரைவரை தாக்கிய தந்தை-மகன் கைது செய்யப்பட்டனர்.
இளையான்குடி,

இளையான்குடி அருகே உள்ள கொடிமங்களம் கிராமத்தை சேர்ந்தவர்கள் கிருஷ்ணன்(வயது 65), பாலு. இவர்கள் இருவரது குடுபத்தினருக்கும் இடையே பூர்வீக சொத்து தகராறு இருந்து வந்தது. இந்த நிலையில் சம்பவத்தன்று பாலு மகன் சரவணன்(34) பொக்லைன் எந்திரத்தை ஓட்டி வந்தார். அப்போது பாதையில் நின்றிருந்த கிருஷ்ணன் மகன் தமிழ்செல்வன்(32) செல்போனில் பேசிக்கொண்டு அவருக்கு வழிவிடாமல் இருந்ததாக தெரிகிறது. இது தொடர்பாக தட்டி கேட்ட போது தமிழ்செல்வன் அவரை தாக்கினார். அப்போது அங்கு வந்த கிருஷ்ணனும் கம்பால் சரவணனை தாக்கினார். இதில் காயம் அடைந்த அவர் இளையான்குடி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்த புகாரின் பேரில் தந்தை-மகன் மீது போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. மானநஷ்ட வழக்கு தொடர்ந்தார் நடிகை சமந்தா
தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தா, நீதிமன்றத்தில் மானநஷ்ட வழக்கு தொடர்ந்துள்ளார்.
2. வேலைவாய்ப்புகளில் தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை கோரி வழக்கு
வேலைவாய்ப்புகளில் தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை கோரிய வழக்கு மதுைர ஐகோர்ட்டில் ஒத்தி வைக்கப்பட்டது.
3. போலீசாருக்கு தகவல் தெரிவிக்காததால் 5 பேர் மீது வழக்கு
போலீசாருக்கு தகவல் தெரிவிக்காததால் 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
4. அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் முதல் இடம் பிடித்த காளைக்கு பரிசாக கார் வழங்கக்கோரி வழக்கு
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில்முதல் இடம் பிடித்த காளைக்கு பரிசாக கார் வழங்கக்கோரி வழக்கில்கலெக்டர் பரிசீலிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்து உள்ளது.
5. தடையை மீறிய 5 பேர் மீது வழக்கு
எருதுகட்டு விழாவில் தடையை மீறிய 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.