மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்து வாலிபர் பலி + "||" + Accident

மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்து வாலிபர் பலி

மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்து வாலிபர் பலி
சாக்கோட்டை அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்து வாலிபர் பலியானார்.
காரைக்குடி,

சாக்கோட்டை போலீஸ் சரகம் அண்டக்குடி நடுகுடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் கணேசன் (வயது 34). இவர் வெளிநாடு செல்வதற்காக தனது பாஸ்போர்ட்டை புதுப்பிக்க மோட்டார் சைக்கிளில் தேவகோட்டை சென்றார். சென்ற வேலையை முடித்துவிட்டு மீண்டும் அண்டக்குடிக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். சோனார்கோட்டை கண்மாய் அருகே வரும்போது திடீரென ரோட்டில் மாடு குறுக்கே வர அதன் மீது மோதாமல் இருக்க கணேசன் திடீரென்று பிரேக் போட்டார். அப்போது மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து நிலை தடுமாறி கீழே விழுந்தது. இதில் கணேசனுக்கு தலையில் பலத்த அடிபட்டது. உடனடியாக அவர் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் அவர் இறந்தார்.
இதுகுறித்து சாக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் அல்லிராணி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


தொடர்புடைய செய்திகள்

1. சரக்கு ஆட்டோ மோதி டிரைவர் பலி
சரக்கு ஆட்டோ மோதி டிரைவர் உயிரிழந்தார்.
2. ரோட்டில் நின்றிருந்தவர் கார் மோதி சாவு
வாடிப்பட்டி அருகே ரோட்டில் நின்றிருந்தவர் கார் மோதி பலியானார்.
3. கார் மோதி தி.மு.க. பிரமுகர் பலி
கொட்டாம்பட்டி அருகே கார் மோதி தி.மு.க.பிரமுகர் பலியானார்.
4. ஆம்னி பஸ்-சரக்கு ஆட்டோ மோதல்; தாய்-மகன் உள்பட 4 பேர் சாவு
துமகூரு அருகே, ஆம்னி பஸ்-சரக்கு ஆட்டோ மோதிக் கொண்ட விபத்தில் தாய்-மகன் உள்பட 4 பேர் உயிரிழந்த சம்பவம் நடந்து உள்ளது.
5. சரக்கு வேன்கள் கவிழ்ந்து 28 பேர் படுகாயம்
சரக்கு வேன்கள் கவிழ்ந்து 28 பேர் படுகாயமடைந்தனர்.