மாவட்ட செய்திகள்

பொன்னமராவதியில்அரசு பஸ்சில் தவறவிட்ட நகை-பணம் உரியவரிடம் ஒப்படைப்பு கண்டக்டர்-டிரைவருக்கு பாராட்டு + "||" + Handing over of jewelery-money missing on government bus

பொன்னமராவதியில்அரசு பஸ்சில் தவறவிட்ட நகை-பணம் உரியவரிடம் ஒப்படைப்பு கண்டக்டர்-டிரைவருக்கு பாராட்டு

பொன்னமராவதியில்அரசு பஸ்சில் தவறவிட்ட நகை-பணம் உரியவரிடம் ஒப்படைப்பு கண்டக்டர்-டிரைவருக்கு பாராட்டு
அரசு பஸ்சில் தவறவிட்ட நகை-பணம் உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டது.
பொன்னமராவதி:
கோவை மாவட்டம், ஒண்டிப்புதூர் சிவலிங்கபுரம் பகுதியை சேர்ந்தவர் மகாலட்சுமி. இவர், நேற்று கோயம்புத்தூரிலிருந்து பொன்னமராவதிக்கு வரும் அரசு பஸ்சில் திண்டுக்கல்லில் ஏரி கொட்டாம்பட்டியில் இறங்கியுள்ளார். மேலும் இவர் கையில் வைத்திருந்த பையில் 9½ பவுன் தங்க சங்கிலி, ரேஷன் கார்டு, ஆதார் கார்டு, ரூ.2 ஆயிரம், டிரைவிங் லைசென்ஸ், வங்கி ஏ.டி.எம். கார்டு உள்ளிட்டவைகளை பஸ்சில் தவற விட்டுள்ளார். பஸ்சில் விட்டு இறங்கிய மகாலட்சுமி தன் கையிலிருந்த பையை தேடியபோது, பஸ்சில் தவற விட்டது தெரியவந்தது. உடனடியாக கொட்டாம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். இந்தநிலையில் பொன்னமராவதி வந்தடைந்த அரசு பஸ்சில் கிடந்த பையை டிரைவர் தவச்செல்வம், கண்டக்டர் மனோகரன் ஆகிய இருவரும் போக்குவரத்து பணிமனையில் உள்ள பொறுப்பு மேலாளர் கருப்பையாவிடம் ஒப்படைத்துள்ளளர். கருப்பையா உரிய விசாரணை செய்து பையை தவறவிட்ட மகாலட்சுமியை வரவழைத்து நகை-பணத்தை ஒப்படைத்தார். இந்த நேர்மையான செயலை கிளை மேலாளர், சக கண்டக்டர், டிரைவர்கள் வெகுவாக பாராட்டினர்.

தொடர்புடைய செய்திகள்

1. முதியவர்களிடம் ஏ.டி.எம்.கார்டை நூதன முறையில் மாற்றி பணம் திருட்டு: கைதான 3 பேர் பற்றி பரபரப்பு தகவல்கள்
முதியவர்களிடம் ஏ.டி.எம். கார்டை நூதன முறையில் மாற்றி பணம் திருடிய பீகார் மாநில வாலிபர்கள் 3 பேர் கைதானது பற்றி பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது.
2. வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா வேட்பாளரின் கணவர் கைது
நாங்குநேரி அருகே வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்தது தொடர்பாக பெண் வேட்பாளரின் கணவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ.40 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.
3. வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு
வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு மோட்டார் சைக்கிளில் வந்த கொள்ளையன், காரில் தப்பிச்சென்றான்.
4. திருவள்ளூரில் வீட்டின் பூட்டை உடைத்து நகை-பணம் திருட்டு
திருவள்ளூரில் வீட்டின் பூட்டை உடைத்து நகை-பணம் திருடப்பட்டது.
5. அச்சரப்பாக்கத்தில் துணிகரம் பேராசிரியர் வீட்டில் 104 பவுன் நகை-பணம் கொள்ளை
அச்சரப்பாக்கத்தில் கல்லூரி பேராசிரியர் வீட்டில் புகுந்த கொள்ளையர்கள் 104 பவுன் நகை, பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.