மாவட்ட செய்திகள்

பெற்றோர் கண்டித்ததால் வாலிபர் தற்கொலை + "||" + Adolescent suicide

பெற்றோர் கண்டித்ததால் வாலிபர் தற்கொலை

பெற்றோர் கண்டித்ததால் வாலிபர் தற்கொலை
திருமணமான உறவுக்கார பெண்ணுடன் ஏற்பட்ட பழக்கத்தை பெற்றோர் கண்டித்ததால் வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
கொல்லங்கோடு, 
திருமணமான உறவுக்கார பெண்ணுடன் ஏற்பட்ட பழக்கத்தை பெற்றோர் கண்டித்ததால் வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
இந்த பரபரப்பு சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
மீன்பிடி தொழில்
குமரி மாவட்டம் கொல்லங்கோடு அருகே மார்த்தாண்டன்துறை நடுவிளாகம் பகுதியை சேர்ந்தவர் லாரன்ஸ். இவருடைய மகன் ரீஜன் (வயது 26). 
இவர், கேரள மாநிலம் கொல்லத்தில் உள்ள உறவுக்கார பெண் வீட்டில் தங்கியிருந்து, அவர்களுக்கு சொந்தமான வள்ளத்தில் மீன்பிடி தொழில் செய்து வந்தார்.
உறவுக்கார பெண்ணுடன் பழக்கம்
அப்போது, அந்த பெண்ணுடன் அவருக்கு தவறான பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அந்த பெண்ணுக்கு திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளனர். 
இதற்கிடையே ரீஜன் சொந்த ஊருக்கு திரும்பினார். அப்போது, திருமணமான பெண்ணுடன் ரீஜனுக்கு பழக்கம் இருப்பதை பெற்றோர் கண்டித்ததாக தெரிகிறது. இதனால் ரீஜன் மனமுடைந்த நிலையில் காணப்பட்டு வந்தார். 
தற்கொலை
இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். வீட்டுக்கு திரும்பிய பெற்றோர், ரீஜன் தூக்கில் பிணமாக தொங்கியதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். மகனின் உடலை பார்த்து கதறி அழுதனர். 
இதுபற்றி தகவல் அறிந்த கொல்லங்கோடு போலீசார் விரைந்து சென்று ரீஜனின் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருமணமான உறவுக்கார பெண்ணுடன் ஏற்பட்ட பழக்கத்தை பெற்றோர் கண்டித்ததால் வாலிபர் தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

தொடர்புடைய செய்திகள்

1. விஷம் குடித்து வாலிபர் தற்கொலை
பொம்மிடி அருகே விஷம் குடித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
2. கேரள வாலிபர் தற்கொலை
கேரள வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
3. பழவூர் :வாலிபர் தற்கொலை
வாலிபர் தற்கொலை
4. முகநூலில் வீடியோவில் பேசியபடியே வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
ராய்ச்சூர் அருகே முகநூலில் வீடியோவில் பேசியபடியே வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். போலீசார் மீது அவர் பரபரப்பு குற்றச்சாட்டு கூறியுள்ளார்.
5. வாலிபர் தற்கொலை
வாலிபர் தற்கொலை