மாவட்ட செய்திகள்

கல்பாக்கம் அருகே இளம்பெண் தீக்குளித்து தற்கொலை + "||" + Teen commits suicide by setting fire near Kalpakkam

கல்பாக்கம் அருகே இளம்பெண் தீக்குளித்து தற்கொலை

கல்பாக்கம் அருகே இளம்பெண் தீக்குளித்து தற்கொலை
கல்பாக்கம் அருகே இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
கல்பாக்கம்,

செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அடுத்த குன்னத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜேஷ். கூலித்தொழிலாளி. இவரது மனைவி ரம்யா (வயது 22). இவர்களுக்கு 1½ வயதில் பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் கணவன், மனைவி இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் ஏற்பட்ட தகராறில் விரக்தியடைந்த ரம்யா வீட்டில் இருந்த மண்எண்ணெய்யை தனது உடலில் ஊற்றி தீ வைத்து கொண்டார்.

சாவு

உடனடியாக ராஜேஷ், ரம்யாவை மீட்டு சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு சிகிச்சை பலனின்றி ரம்யா பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து அணைக்கட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

திருமணமாகி 2 ஆண்டுகளே ஆனதால் ஆர்.டி.ஓ. விசாரணைக்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. ‘பேஸ்புக்’ அளித்த தகவலால் தற்கொலைக்கு முயன்றவரை காப்பாற்றிய போலீசார்
டெல்லியில் ரஜவுரி கார்டன் பகுதியை சேர்ந்த 43 வயது ஆண் ஒருவர், தற்கொலை செய்து கொள்ள திட்டமிட்டார். தனது தற்கொலையை ‘பேஸ்புக்’ சமூக வலைத்தளத்தில் நேரடியாக காண்பிக்க முடிவு செய்தார்.
2. காதலன் ஏற்காததால் அரசு ஆஸ்பத்திரியில் இளம்பெண் தற்கொலை
கணவர், 2 மகள்களை உதறிவிட்டு ராமநாதபுரம் வந்த இளம்பெண்ணை, காதலன் திருமணம் செய்ய மறுத்ததால், அந்த பெண் அரசு ஆஸ்பத்திரியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட விபரீத சம்பவம் நடந்துள்ளது.
3. நடிகை தற்கொலை... காதலனுக்கு தொடர்பா? - பிரேத பரிசோதனை அறிக்கையால் வெளிவந்த உண்மை
நடிகை சவுஜன்யா, கடந்த செப்டம்பர் மாதம் 30-ந் தேதி தன்னுடைய வீட்டில் தூக்கில் தொங்கியபடி பிணமாக மீட்கப்பட்டார்.
4. திருநின்றவூரில் மூதாட்டி மண்எண்ணெய் ஊற்றி தீக்குளித்து சாவு
திருநின்றவூரில் காலில் காயம் ஏற்பட்ட எலும்பு முறிவால் அவதியடைந்த மூதாட்டி உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளித்து இறந்தார்.
5. மகள் காதல் திருமணம் செய்ததால் தாய், தந்தை தற்கொலை
மகள் காதல் திருமணம் செய்ததால் விரக்தி அடைந்த தாய், தந்தை தற்கொலை செய்துகொண்டனர்.