மாவட்ட செய்திகள்

முறையாக பொருட்கள் வழங்கக்கோரி ரேஷன் கடையை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம் + "||" + Public protest by besieging the ration shop demanding proper supply of goods

முறையாக பொருட்கள் வழங்கக்கோரி ரேஷன் கடையை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம்

முறையாக பொருட்கள் வழங்கக்கோரி ரேஷன் கடையை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம்
முறையாக பொருட்கள் வழங்கக்கோரி ரேஷன் கடையை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம்.
கும்மிடிப்பூண்டி,

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த பெரிய ஓபுளாபுரம் கிராமத்தில் உள்ள ரேஷன்கடை மூலமாக அந்த பகுதியை சேர்ந்த 500 ரேஷன்கார்டுதாரர்களுக்கு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த ரேஷன்கடையில் கடந்த சில மாதங்களாக எந்த ஒரு பொருளும் முறையாக வழங்கப்படவில்லை. பிரதம மந்திரி திட்டம் மற்றும் மாநில அரசின் திட்டம் போன்றவற்றின் மூலம் வழங்கப்படும் விலையில்லா அரிசியும் பயனாளிகளுக்கு கிடைக்கவில்லை என்று புகார் கூறப்படுகிறது. இதனால் ரேஷன்கடையை நம்பி உள்ள குடும்பத்தினர் பெரும் பாதிப்புக்குள்ளானார்கள். இந்த நிலையில் நேற்று மேற்கண்ட ரேஷன்கடையை கிராம மக்கள் திடீரென முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து அங்கு வந்த கூட்டுறவு சங்க தலைவர் முல்லை வேந்தன், ஊராட்சி மன்ற தலைவர் செவ்வந்தி மனோஜ் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அங்கிருந்து கலைந்து போக செய்தனர். இது தொடர்பாக பொதுமக்கள் கும்மிடிப்பூண்டி தாசில்தார் மகேஷிடம் கோரிக்கை மனு ஒன்றையும் அளித்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. ஆவடி ரெயில் நிலையத்தில் மின்சார ரெயிலை மறித்து கல்லூரி மாணவர்கள் போராட்டம்
ஆவடி ரெயில் நிலையத்தில் மின்சார ரெயிலை மறித்து கல்லூரி மாணவர்கள் போராட்டம்.
2. ஆவடி ரெயில் நிலையத்தில் மின்சார ரெயிலை மறித்து கல்லூரி மாணவர்கள் போராட்டம்
ஆவடி ரெயில் நிலையத்தில் மின்சார ரெயிலை மறித்து கல்லூரி மாணவர்கள் போராட்டம்.
3. ஆயுத பூஜை பண்டிகையை முன்னிட்டு பொரி-அவல், பூஜை பொருட்கள் வாங்குவதில் பொதுமக்கள் ஆர்வம்
ஆயுத பூஜை பண்டிகையை முன்னிட்டு பொரி-அவல் மற்றும் பூஜை பொருட்களை பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கி சென்றனர். அலங்கார பொருட்களும் அதிக அளவில் விற்பனை ஆனது.
4. புதுச்சேரியில் முழு அடைப்பு போராட்டம்; தனியார் பஸ்கள், ஆட்டோ ஓடவில்லை
புதுச்சேரியில் உள்ளாட்சி தேர்தல் குளறுபடிகளை கண்டித்து இன்று முழு அடைப்பு போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
5. கடம்பத்தூரில் பணிகள் முடிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ள ரெயில்வே மேம்பாலத்தை திறக்க பொதுமக்கள் கோரிக்கை
கடம்பத்தூரில் பணிகள் முடிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ள ரெயில்வே மேம்பாலத்தை விரைந்து திறக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.