மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிளுக்கு தீவைத்தவர் கைது + "||" + Man arrested for setting fire to motorcycle

மோட்டார் சைக்கிளுக்கு தீவைத்தவர் கைது

மோட்டார் சைக்கிளுக்கு தீவைத்தவர் கைது
நெல்லை அருகே மோட்டார் சைக்கிளுக்கு தீவைத்தவர் கைது செய்யப்பட்டார்.
நெல்லை:

நெல்லை அருகே உள்ள கங்கைகொண்டானை அடுத்த இத்திகுளம் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் பிச்சையா (வயது 36). நேற்று முன்தினம் இரவு இவருக்கும், இவருடைய மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இதைக்கண்ட பக்கத்து வீட்டை சேர்ந்த உறவினர் குணசேகரன் (49) என்பவர் இருவரையும் கண்டித்து உள்ளார்.

இதில் ஆத்திரம் அடைந்த பிச்சையா, இரவு நேரத்தில் குணசேகரன் வீட்டு முன்பு நிறுத்தி வைத்திருந்த மோட்டார் சைக்கிளுக்கு தீவைத்தார். மேலும் குணசேகரை அவதூறாக பேசி மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து கங்கைகொண்டான் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அய்யப்பன் வழக்குப்பதிவு செய்து பிச்சையாவை கைது செய்தார்.

தொடர்புடைய செய்திகள்

1. மதுபாட்டில்கள் பறிமுதல்; 4 பேர் கைது
மதுபாட்டில்கள் பறிமுதல்; 4 பேர் கைது
2. தொடர் திருட்டில் ஈடுபட்ட 5 பேர் கைது
மதுரை நகரில் பூட்டியிருந்த வீடுகளில் தொடர் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட 5 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து ரூ.24 லட்சம் மதிப்புள்ள தங்கம், வெள்ளி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
3. சூதாடிய 23 பேர் கைது
விருதுநகரில் சூதாடிய 23 பேரை போலீசார் கைது செய்தனர்.
4. பெயிண்டர் கொலை வழக்கில் வாலிபர் கைது
சிவகங்கை பெயிண்டர் கொலை வழக்கில் வாலிபர் கைது செய்யப்பட்டார்.
5. கள்ளக்குறிச்சியில் ஆன்லைன் சூதாட்டம் 9 பேர் கைது
கள்ளக்குறிச்சியில் ஆன்லைன் சூதாட்டம் 9 பேர் கைது