மாவட்ட செய்திகள்

14 வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இடமாற்றம் + "||" + Relocation

14 வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இடமாற்றம்

14 வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இடமாற்றம்
சிவகங்கை மாவட்டத்தில் பணிபுரியும் 14 வட்டார வளர்ச்சி அலுவலர்களை இடமாற்றம் செய்து கலெக்டர் மதுசூதன்ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.
சிவகங்கை,

சிவகங்கை மாவட்டத்தில் பணிபுரியும் 14 வட்டார வளர்ச்சி அலுவலர்களை இடமாற்றம் செய்து கலெக்டர் மதுசூதன்ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.

சிவகங்கை

சிவகங்கை மாவட்டத்தில் மாறுதல் செய்யப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலர்கள் விவரம் வருமாறு:-
சிங்கம்புணரியில் வட்டார வளர்ச்சி அலுவலராக பணிபுரிந்த ரத்தினவேலு சிவகங்கை வட்டார வளர்ச்சி அலுவலர் ஆக மாற்றப்பட்டார். ஏற்கனவே சிவகங்கையில் பணிபுரிந்த பழனியம்மாள் கண்ணங்குடி வட்டார வளர்ச்சி அலுவலர் ஆக மாற்றப்பட்டார். கண்ணங்குடியில் பணிபுரிந்த சரவணன் இளையான்குடி வட்டார வளர்ச்சி அலுவலர் மாற்றப்பட்டார்.இளையான்குடியில் கிராம ஊராட்சிகள் வட்டார வளர்ச்சி அலுவலராக பணிபுரிந்த ராஜேஸ்வரி சிவகங்கையில் உள்ள உதவி இயக்குனர் ஊராட்சிகள் அலுவலகத்தில் கண்காணிப்பாளராக மாற்றப்பட்டார். ஏற்கனவே இங்கு பணிபுரிந்த பிரதீப் சிவகங்கையில் வட்டார வளர்ச்சி அலுவலர் விடுப்பு மற்றும் பயிற்சியாக மாற்றப்பட்டார்.

தேவகோட்டை

சிவகங்கை வட்டார வளர்ச்சி அலுவலர் விடுப்பு மற்றும் பயிற்சியாக பணிபுரிந்த திருநாவுக்கரசு கண்ணங்குடி கிராம ஊராட்சிகள் வட்டார வளர்ச்சி அலுவலராக மாற்றப்பட்டார்.ஏற்கனவே அங்கு பணிபுரிந்த மாலதி தேவகோட்டை கிராம ஊராட்சிகள் வட்டார வளர்ச்சி அலுவலராக நியமிக்கப்பட்டார்.
தேவகோட்டையில் கிராம ஊராட்சிகள் வட்டார வளர்ச்சி அலுவலராக பணிபுரிந்த சாந்தி இளையான்குடி வட்டார வளர்ச்சி அலுவலர் ஆக மாற்றப்பட்டார். ஏற்கனவே அங்கு பணிபுரிந்த ஸ்ரீதர் தேவகோட்டை வட்டார வளர்ச்சி அலுவலராக மாற்றப்பட்டார்.
தேவகோட்டையில் பணிபுரிந்த பாலசுப்பிரமணியன் சிங்கம்புணரி வட்டார வளர்ச்சி அலுவலர்  ஆக மாற்றப்பட்டார்.மேலும் சிங்கம்புணரியில் வட்டார வளர்ச்சி அலுவலர் ஆக இருந்த பத்மநாபன் திருப்புவனம் வட்டார வளர்ச்சி அலுவலர் ஆக மாற்றப்பட்டார்.

திருப்புவனம்

திருப்புவனத்தில் பணிபுரிந்த லட்சுமணராஜ் சிங்கம்புணரி வட்டார வளர்ச்சி அலுவலர் ஆக மாற்றப்பட்டார். எஸ்.புதூரில் வட்டார வளர்ச்சி அலுவலர் ஆக பணிபுரிந்த நிர்மல்குமார் அங்கேயே கிராம ஊராட்சிகள் வட்டார வளர்ச்சி அலுவலராக நியமிக்கப்பட்டார். ஏற்கனவே அங்கு பணிபுரிந்த ஜெகநாதசுந்தரம் அங்கேயே வட்டார வளர்ச்சி அலுவலர் ஆக நியமிக்கப்பட்டார்.
இதற்கான உத்தரவை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

1. சிவகாசி நகராட்சி கமிஷனர் திடீர் மாற்றம்
சிவகாசி நகராட்சி கமிஷனர் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
2. மதுரை ஆயுதப்படை போலீஸ் துணை கமிஷனர் சென்னைக்கு இடமாற்றம்
அரை நிர்வாண வீடியோ ஏற்படுத்திய சர்ச்சை தொடர்பாக மதுரை ஆயுதப்படை போலீஸ் துணை கமிஷனர் சென்னைக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.
3. முதுநிலை வருவாய் ஆய்வாளர்கள் உடனே பணியில் சேர உத்தரவு
விருதுநகர் மாவட்டத்தில் இடமாறுதல் செய்யப்பட்ட முதுநிலை வருவாய் ஆய்வாளர்கள் உடனே பணியில் சேர உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
4. மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி இடமாற்றம்
ராமநாதபுரம் மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
5. மதுரை மாநகரில் 90 போலீசார் இடமாற்றம்
மதுரை மாநகரில் 90 போலீசார் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.