மாவட்ட செய்திகள்

4 பேர் மீது குண்டர் சட்டம் + "||" + gundass

4 பேர் மீது குண்டர் சட்டம்

4 பேர் மீது குண்டர் சட்டம்
4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
ராமநாதபுரம், 
சின்னஆனையூர் பகுதியை சேர்ந்தவர் முருகையா மகன் சக்திமுருகன்.இவரும் அதே பகுதியை சேர்ந்த அழகர்சாமி மகன் அழகுராஜா (வயது24) என்பவரும் டிராக்டரில் சென்று கொண்டிருந்தபோது முன்பகை காரணமாக மேலகன்னிசேரியை சேர்ந்த சிலர் அரிவாள் மற்றும் கம்பால் தாக்கி படுகாயப்படுத்தினர்.இந்த சம்பவம் தொடர்பாக சக்திமுருகன் அளித்த புகாரின் அடிப்படையில் பேரையூர் போலீசார் வழக்குபதிவு செய்து மேலகன்னிசேரியை சேர்ந்த ஜெயபால் மகன் முனியசாமி (21), பாபு மகன் மணிகண்டன் (21), லட்சுமணன் மகன் நாகேந்திரன் (26), கிருஷ்ணன் மகன் வழிவிட்டான் (42) ஆகிய 4 பேரையும் கைது செய்தனர்.
இவர்கள் தொடர் குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்ததோடு, சாதி ரீதியான மோதலில் ஈடுபட்டதால் இவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக் பரிந்துரை செய்தார்.இதனை ஏற்று மாவட்ட கலெக்டர் சந்திரகலா அதற்கான உத்தரவிட்டுள்ளார்.இதனை தொடர்ந்து 4 பேரும் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்

தொடர்புடைய செய்திகள்

1. 4 பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை
4 பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது
2. தொழிலாளி கொலை வழக்கில் கைதான 4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
திண்டுக்கல் அருகே தொழிலாளி கொலை வழக்கில் கைதான 4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
3. சேலத்தில் தொடர் குற்றங்களில் ஈடுபட்ட 4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
தொடர் குற்றங்களில் ஈடுபட்ட 4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது