மாவட்ட செய்திகள்

புதுக்கோட்டை மாவட்டத்தில் இதுவரை 3½ லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி + "||" + Corona vaccine

புதுக்கோட்டை மாவட்டத்தில் இதுவரை 3½ லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி

புதுக்கோட்டை மாவட்டத்தில் இதுவரை 3½ லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி
புதுக்கோட்டை மாவட்டத்தில் இதுவரை 3½ லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது
புதுக்கோட்டை
கொரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து தப்பிக்க பொதுமக்கள் அவசியம் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகள் அறிவுறுத்தியுள்ளன. இதனால் பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. புதுக்கோட்டை மாவட்டத்தில் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. அந்தவகையில் மாவட்டத்தில் இதுவரை 3 லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக கலெக்டர் கவிதா ராமு தெரிவித்துள்ளார். இதேபோல கொரோனா விழிப்புணர்வு வாரத்தின் ஒரு பகுதியாக 100 சதவீதம் கொரோனா தடுப்பூசி செலத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் 100 சதவீதம் கொரோனா தடுப்பூசி போடப்பட்ட கிராம ஊராட்சி பேரூராட்சி மற்றும் நகராட்சிகளை பாராட்டி மாவட்ட நிர்வாகத்தினரால் நற்சான்றிதழ்களும் பரிசுகளும் வழங்கப்பட உள்ளன.


தொடர்புடைய செய்திகள்

1. குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசி விலை இறுதியானது விரைவில் அறிமுகம்
ஜைகோவ்-டி தடுப்பூசியானது மூன்று டோசுகள் கொண்டதும், பிரத்யேக சிரிஞ்ச் வாயிலாக போடக்கூடியதுமாகும்.
2. கொரோனா தடுப்பூசி செலுத்தினால் எய்ட்ஸ் நோய்..! அதிபரின் சர்ச்சை பேச்சு!
தடுப்பூசி குறித்து தவறான தகவலை பரப்பிய பிரேசில் அதிபரின் வீடியோ பதிவு பேஸ்புக் மற்றும் யூடியூப் தளங்களில் இருந்து நீக்கப்பட்டது.
3. சென்னையில் கொரோனா தடுப்பூசி போடுவோருக்கு குலுக்கல் முறையில் விதவிதமான பரிசு
சென்னையில் கொரோனா தடுப்பூசி போடுவோருக்கு குலுக்கல் முறையில் விதவிதமான பரிசு வழங்கப்பட்டது. மாநகராட்சியின் கவனம் ஈர்க்கும் நடவடிக்கைக்கு பாராட்டுகள் குவிகிறது.
4. மதுரையில் ஒரே நாளில் 82 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி
மதுரையில் நேற்று 1200 இடங்களில் நடந்த சிறப்பு முகாம்களில் 82 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
5. 81 ஆயிரத்து 471 பேருக்கு கொரோனா தடுப்பூசி
மாவட்டத்தில் 81 ஆயிரத்து 471 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.