மாவட்ட செய்திகள்

டிரான்ஸ்பார்மரில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த வாலிபர் மின்சாரம் தாக்கியதால் ஆஸ்பத்திரியில் அனுமதி + "||" + The young man, who threatened to commit suicide by climbing on a transformer, was admitted to the hospital after being electrocuted

டிரான்ஸ்பார்மரில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த வாலிபர் மின்சாரம் தாக்கியதால் ஆஸ்பத்திரியில் அனுமதி

டிரான்ஸ்பார்மரில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த வாலிபர் மின்சாரம் தாக்கியதால் ஆஸ்பத்திரியில் அனுமதி
குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக போலீசார் வழக்குப்பதிவு செய்ய முற்பட்டதால் டிரான்ஸ்பார்மரில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த வாலிபரை மின்சாரம் தாக்கியது. அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
திரு.வி.க. நகர்,

சென்னை புளியந்தோப்பு தட்டான்குளம் பகுதியைச் சேர்ந்தவர் பார்த்தசாரதி (வயது 26). இவர், தனியார் மருந்து கம்பெனியில் வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு தனது நண்பர்களுடன் மது அருந்தியதாக கூறப்படுகிறது.


பின்னர் தனது நண்பரை வண்ணாரப்பேட்டையில் இறக்கி விட்டு வருவதற்காக புளியந்தோப்பு டிமலஸ் சாலை வழியாக மோட்டார் சைக்கிளில் சென்றார்.

அப்போது அங்கு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த பேசின் பிரிட்ஜ் போலீசார், இவரை வழிமறித்து சோதனை செய்தனர். அதில் பார்த்தசாரதி, மதுபோதையில் இருப்பது தெரிந்தது.

மின்சாரம் தாக்கியது

எனவே மது போதையில் மோட்டார் சைக்கிளை ஒட்டி வந்ததாக அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்ய முற்பட்டனர். இதனால் ஆத்திரமடைந்த பார்த்தசாரதி, இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தான் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக கூறி திடீரென அங்கிருந்த டிரான்ஸ்பார்மரில் ஏறி அருகில் சென்ற மின்சார கம்பியை பிடித்தார்.

இதில் மின்சாரம் தாக்கியதால் தூக்கி வீசப்பட்ட பார்த்தசாரதியை போலீசார் மீட்டு ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். மேலும் இதுபற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. ஆபாச படங்களை இணையதளத்தில் வெளியிடுவேன்: அமெரிக்காவில் படிக்கும், சென்னை மாணவியிடம் ரூ.1 கோடி கேட்டு மிரட்டல்
ஆபாச படங்களை இணையதளத்தில் வெளியிடாமல் இருக்க, அமெரிக்காவில் படிக்கும் சென்னை மாணவியிடம், ரூ.1 கோடி கேட்டு மிரட்டிய என்ஜினீயர் கைது செய்யப்பட்டார்.
2. இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
நெல்லை அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
3. 2 குழந்தைகளுடன் கிணற்றில் குதித்து பெண் தற்கொலை
விருதுநகர் அருகே காதல் திருமணம் செய்த பெண் தனது இரு குழந்தைகளுடன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
4. தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை
திருப்பரங்குன்றத்தில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை ெசய்து கொண்டார்.
5. இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
பாவூர்சத்திரம் அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.