மாவட்ட செய்திகள்

டிராக்டர்களை சாலையில் நிறுத்தி விவசாயிகள் போராட்டம் + "||" + Struggle

டிராக்டர்களை சாலையில் நிறுத்தி விவசாயிகள் போராட்டம்

டிராக்டர்களை சாலையில் நிறுத்தி விவசாயிகள் போராட்டம்
சடையம்பட்டி நெல்கொள்முதல் நிலையத்தை திறக்க கோரி டிராக்டர்களை சாலையில் நிறுத்தி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காரையூர், ஆக.4-
சடையம்பட்டி நெல்கொள்முதல் நிலையத்தை திறக்க கோரி டிராக்டர்களை சாலையில் நிறுத்தி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சாலையில் நிறுத்தி போராட்டம்
காரையூர் அருகே சடையம்பட்டியில் அரசின் நேரடி நெல்கொள்முதல் நிலையம் உள்ளது. ஆனால் இது திறக்கப்படாமல் உள்ளது. இந்த கொள்முதல் நிலையத்தில் முள்ளிப்பட்டி, ஒலியமங்கலம், உசிலம்பட்டி, சூரப்பட்டி, கொன்னையம்பட்டி, இடையாத்தூர், அரசமலை மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் தாங்கள் அறுவடை செய்த நெல்மணிகளை விற்பனை செய்வார்கள்.
தற்போது, இப்பகுதிகளில் நெல்அறுவடை பணிகள் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் இப்பகுதிகளை சேர்ந்த 15-க்கும் மேற்பட்ட கிராம விவசாயிகள் டிராக்டரில் நெல் மூட்டைகளை ஏற்றி வந்தனர். ஆனால் சடையம்பட்டி நெல்கொள்முதல் நிலையம் திறக்கப்படாததால் தாங்கள் நெல்மூட்டைகளை ஏற்றி வந்த வாகனங்களை சாலையில் நிறுத்தி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கூடுதல் நெல் கொள்முதல் நிலையம்
நாங்கள் கொண்டுவந்த நெல் மூட்டைகளை அரசு கொள்முதல் செய்ய வேண்டும். சடையம்பட்டி நெல் கொள்முதல் நிலையம் தொடர்ந்து செயல்பட வேண்டும். பொன்னமராவதி ஒன்றியத்தில் 42 கிராம பஞ்சாயத்துகளுக்கும் இந்த ஒரே ஒரு நெல்கொள்முதல் நிலையம்தான் உள்ளது. எனவே கூடுதல் நெல்கொள்முதல் நிலையம் திறக்க வேண்டும் என வலியுறுத்தி கோஷமிட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்த பொன்னமராவதி தாசில்தார் ஜெயபாரதி, காரையூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணன், வருவாய் ஆய்வாளர் பாண்டி ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்ததை தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. கனிமவளத்துறை அலுவலகத்தை டிப்பர் லாரி உரிமையாளர்கள் முற்றுகையிட்டு தர்ணா
கனிமவளத்துறை அலுவலகத்தை டிப்பர் லாரி உரிமையாளர்கள் முற்றுகையிட்டு தர்ணாவில் ஈடுபட்டனர்.
2. பெருந்துறை அருகே தனியார் ஆழ்குழாய் கிணறு அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு
பெருந்துறை அருகே தனியார் ஆழ்குழாய் கிணறு அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு
3. துப்புரவு பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்
திருத்தங்கல் நகராட்சியில் பணியாற்றிய 200 துப்புரவு பணியாளர்களுக்கு கடந்த மாதம் சம்பளம் இன்னும் வழங்காத நிலையில் நேற்று உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.
4. தொடர் வேலைநிறுத்த போராட்டம்
உற்பத்தி விலையில் டீசல் வழங்க வேண்டும் என்பது போன்ற 4 அம்ச கோரிக்கைகளை வருகிற 10-ந் தேதிக்குள் நிறைவேற்றாவிட்டால் தமிழகம் முழுவதும் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக அனைத்து மீனவர் கூட்டமைப்பு நிர்வாகிகள் அறிவித்துள்ளனர்.
5. கள்ளக்குறிச்சி கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு மாற்றுத்திறனாளிகள் மனிதசங்கிலி போராட்டம்
கள்ளக்குறிச்சி கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு மாற்றுத்திறனாளிகள் மனிதசங்கிலி போராட்டம் உதவித்தொகையை உயர்த்தி வழங்க கோரிக்கை