மாவட்ட செய்திகள்

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியின் வருமான வரி தலைமை இயக்குனராக சுனில் மாத்தூர் பொறுப்பு ஏற்பு + "||" + Sunil Mathur assumes charge as Director General of Income Tax, Tamil Nadu and Pondicherry

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியின் வருமான வரி தலைமை இயக்குனராக சுனில் மாத்தூர் பொறுப்பு ஏற்பு

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியின் வருமான வரி தலைமை இயக்குனராக சுனில் மாத்தூர் பொறுப்பு ஏற்பு
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியின் வருமான வரி தலைமை இயக்குனராக சுனில் மாத்தூர் பொறுப்பு ஏற்பு.
சென்னை,

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வருமான வரி தலைமை இயக்குனராக (புலனாய்வு) சுனில் மாத்தூர் பொறுப்பேற்றுள்ளார். இவர் பதவி உயர்வு பெற்று, வாரணாசியில் இருந்து மாறுதலாகி சென்னை வந்துள்ளார். சுனில் மாத்தூர், 1988-ம் ஆண்டு இந்திய வருவாய்பணி அலுவலர்கள் அணியை சேர்ந்தவர். இவர் குஜராத், ராஜஸ்தான், டெல்லி, கொல்கத்தா, உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் வருமான வரித்துறையின் பல்வேறு அலுவலகங்களில் உயர் பதவிகளை வகித்துள்ளார்.


மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தில் இயக்குனராகவும் பணியாற்றியுள்ளார். 2014-15-ம் ஆண்டில் தேசிய சிங்கப்பூர் பல்கலைக்கழகத்தின் லி குவான் யு பொதுக்கொள்கை பள்ளியில் பொது நிர்வாகத்தில் ஓராண்டு முதுநிலைப் படிப்பை முடித்துள்ளார்.

மேற்கண்ட தகவல் சென்னை வருமான வரித்துறையின் கூடுதல் இயக்குனர் (புலனாய்வு) டி.ரோகிணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. மதுரையில் ‘ஹெலிகாப்டர்’ சுற்றுலா நடத்திய நிறுவனங்களுக்கு ரூ.4¼ லட்சம் வரி
மதுரையில் ‘ஹெலிகாப்டர்’ சுற்றுலா நடத்திய நிறுவனங்களுக்கு ரூ.4¼ லட்சம் வரி.
2. “வாக்கும், வரியும் மட்டும் வேண்டும்; வாழ்வு மேம்பட வேண்டாமா?” - சீமான் கேள்வி
தமிழர்களின் வாக்கும், வரியும் மட்டும் வேண்டும் ஆனால் அவர்களின் வாழ்வு மேம்பட வேண்டாமா? என சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
3. நடிகர் விஜய் உறவினர் சேவியர் பிரிட்டோ வீட்டில் வருமான வரி சோதனை
சீனா நாட்டு செல்போன் நிறுவனங்களின் உதிரி பாகங்களை ஏற்றுமதி செய்ததில் முறைகேடு நடந்திருப்பதாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் நடிகர் விஜய்யின் உறவினரும், ‘மாஸ்டர்' பட தயாரிப்பாளருமான சேவியர் பிரிட்டோவின் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
4. பெட்ரோல், டீசல் வரி குறைப்பால் பணவீக்கம் குறைவு: ரிசர்வ் வங்கி கவர்னர் கருத்து
பெட்ரோல், டீசல் மீதான வரி குறைப்பு பணவீக்கம் குறைவதற்கு சாதகமானதாக ரிசர்வ் வங்கி கவர்னர் தெரிவித்துள்ளார்.
5. குறிப்பிட்ட தேதிக்குள் சொத்து வரி செலுத்தியவர்களுக்கு ரூ.6 கோடி ஊக்கத்தொகை
குறிப்பிட்ட தேதிக்குள் சொத்து வரி செலுத்தியவர்களுக்கு ரூ.6 கோடி ஊக்கத்தொகை சென்னை மாநகராட்சி அறிவிப்பு.