மாவட்ட செய்திகள்

ரெயிலில் அடிபட்டு பெண் சாவு + "||" + Woman killed in train accident

ரெயிலில் அடிபட்டு பெண் சாவு

ரெயிலில் அடிபட்டு பெண் சாவு
கோவில்பட்டியில் ரெயிலில் அடிபட்டு பெண் இறந்தார்.
கோவில்பட்டி:
கோவில்பட்டி இந்திரா நகரைச் சேர்ந்த ஜெயக்குமார் மனைவி மாரிச்செல்வி (வயது 55). இவர் நேற்று காலையில் காய்கறி வாங்கிக் கொண்டு லட்சுமி மில் மேம் பாலம் அருகே தண்டவாளத்தை கடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வந்த ரெயில் மோதி படுகாயம் அடைந்தார்.
இதையடுத்து அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மாரிச்செல்வி இறந்தார். இதுகுறித்து ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சங்கர பாண்டியன் விசாரணை நடத்தி வருகிறார்.

தொடர்புடைய செய்திகள்

1. ரெயிலில் அடிபட்டு தொழிலாளி சாவு
கோவில்பட்டி அருகே ரெயிலில் அடிபட்டு தொழிலாளி இறந்தார்.
2. ரெயிலில் அடிபட்டு மிளா சாவு
ரெயிலில் அடிபட்டு மிளா பரிதாபமாக இறந்தது.