மாவட்ட செய்திகள்

பெண்கள் உள்பட 6 பேர் படுகாயம் + "||" + Injury

பெண்கள் உள்பட 6 பேர் படுகாயம்

பெண்கள் உள்பட 6 பேர் படுகாயம்
அருப்புக்கோட்டை அருகே வேன் கவிழ்ந்த விபத்தில் பெண்கள் உள்பட 6 பேர் படுகாயம் அடைந்தனர்.
அருப்புக்கோட்டை, 
சென்னை ஆவடியை சேர்ந்தவர் சதீஷ்குமார். இவர் தனது குடும்பத்தினர் 17 பேருடன் தூத்துக்குடி மாவட்டம் ஏரலில் உள்ள தனது குலதெய்வ கோவிலுக்கு வேனில் சென்று கொண்டிருந்தார். வேனை திருவள்ளூரை சேர்ந்த செல்லப்பாண்டியன் என்பவர் ஓட்டி வந்தார். நேற்று அதிகாலை அருப்புக்கோட்டை அருகே பாலையம்பட்டி புறவழிச்சாலையில் சென்று கொண்டிருந்தபோது திடீரென எதிர்பாராத விதமாக ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் நிலைதடுமாறி சாலையோர பள்ளத்தில் தலைகீழாக கவிழ்ந்தது. இந்த விபத்தில் வேனில் பயணம் செய்த பெண்கள் உள்பட 6 பேர் காயமடைந்தனர். விபத்து குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த டவுன் போலீசார், தீயணைப்புதுறை உதவியுடன் காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி அளிக்கப்பட்டு பின்னர் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். மேலும் இந்த விபத்து குறித்து டவுண் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

தொடர்புடைய செய்திகள்

1. பஸ் - கிரேன் மோதல்; 6 பேர் காயம்
ராஜபாளையத்தில் பஸ் - கிரேன் மோதிய விபத்தில் 6 பேர் காயம் அடைந்தனர்.
2. அரசு பஸ்-வேன் மோதல்; 21 பேர் படுகாயம்
திருச்சி அருகே கன்டெய்னர் லாரியை முந்த முயன்றபோது, வேன் மீது அரசு பஸ் மோதியதில் வேனில் இருந்த 21 பேர் படுகாயம் அடைந்தனர்.
3. வீடு இடிந்து விழுந்து மூதாட்டி படுகாயம்
விருதுநகரில் வீடு இடிந்து விழுந்து மூதாட்டி படுகாயம் அடைந்தார்.
4. பாலத்தின் மீது கார் மோதியது
வத்திராயிருப்பு அருகே பாலத்தின் மீது கார் மோதிய விபத்தில் 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
5. கார் மோதி 2 பேர் படுகாயம்
கார் மோதி 2 பேர் படுகாயம் அடைந்தனர்.