மாவட்ட செய்திகள்

திருவண்ணாமலையில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல் + "||" + Public road blockade in Thiruvannamalai demanding drinking water

திருவண்ணாமலையில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்

திருவண்ணாமலையில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்
திருவண்ணாமலையில் குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலை,

திருவண்ணாமலை சன்னதி தெரு, துராபலி தெரு, கட்டபொம்மன் தெரு உள்ளிட்ட சுற்றுப் பகுதிகளில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர்.  அந்தப் பகுதிகளில் கடந்த ஒரு மாதமாக குடிநீர் வினியோகிக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.  இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் சன்னதி தெருவில் திடீரெனக் காலிக்குடங்களுடன் வந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்துப் பாதிப்பு ஏற்பட்டது.

தகவல் அறிந்ததும் சம்பவ இடத்துக்கு திருவண்ணாமலை கிழக்குப் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.  நகராட்சி அதிகாரிகளும் சம்பவ இடத்துக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அதில், குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாகப் பொதுமக்களிடம் கூறினர். இதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. மழை நின்ற பின்பும் சென்னை மாநகரில் வடியாத வெள்ளம் பொதுமக்கள் அவதி
சென்னையில் மழை நின்ற பிறகும், பல்வேறு பகுதிகளில் மழை வெள்ளம் வடியாமல் தேங்கி நிற்பதால் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.
2. தடை செய்யப்பட்ட பொருட்களை உற்பத்தி செய்யும் பிளாஸ்டிக் தொழிற்சாலைகள் குறித்து பொதுமக்கள் தகவல் தெரிவித்தால் வெகுமதி
தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் குறித்து தகவல் தெரிவிக்கும் பொதுமக்களுக்கு வெகுமதி அளிக்கப்படும் என்று தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.
3. பொதுமக்கள் சுரங்கப்பாதைகளின் வழியே செல்வதை தவிர்க்க வேண்டும்: மாநகராட்சி கமிஷனர்
சென்னையில் மழையின் காரணமாக அதிகளவு மழைநீர் தேங்கி உள்ளதால், பொதுமக்கள் யாரும் சுரங்கப்பாதைகளின் வழியே செல்ல வேண்டாம் என மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
4. சென்னையில் தாழ்வான குடியிருப்பு பகுதிகளில் தேங்கிய மழைநீரால் பொதுமக்கள் அவதி
சென்னையில் பெய்த பெருமழை மக்களின் இயல்பு வாழ்க்கையை உடைத்துப்போட்டுள்ளது. நகரின் தாழ்வான குடியிருப்பு பகுதியில் தேங்கிய மழைநீரால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகிறார்கள்.
5. ஆபத்தை உணராமல் வெள்ளாற்றை கடந்து செல்லும் பொதுமக்கள்
விருத்தாசலம் அருகே ஆபத்தை உணராமல் வெள்ளாற்றை பொதுமக்கள் கடந்து செல்கின்றனர். எனவே அங்கு மேம்பாலம் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.