மாவட்ட செய்திகள்

வேப்பனப்பள்ளி அருகேகஞ்சா விற்ற 2 பேர் கைது + "||" + 2 arrested

வேப்பனப்பள்ளி அருகேகஞ்சா விற்ற 2 பேர் கைது

வேப்பனப்பள்ளி அருகேகஞ்சா விற்ற 2 பேர் கைது
வேப்பனப்பள்ளி அருகே கஞ்சா விற்ற 2 பேர் கைது
வேப்பனப்பள்ளி:
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே உள்ள தீர்த்தம் பகுதியில் வேப்பனப்பள்ளி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சந்துரு மற்றும் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அங்குள்ள ஒரு தோட்டத்தில் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்வது தெரியவந்தது. இதையடுத்து அங்கு சென்று சோதனையிட்டபோது போலீசார் அங்கு தீர்த்தம் கிராமத்தை சேர்ந்த ஆஞ்சியம்மாள் (வயது 60), பசவராஜ் (42) ஆகியோர் தோட்டத்தில் கஞ்சாவை பதுக்கி வைத்து விற்று வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவர்களை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து சுமார் 14 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். கடந்த ஒரு மாதமாக வேப்பனப்பள்ளி பகுதியில் கஞ்சா விற்பனை தடுக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது கஞ்சா மீண்டும் தமிழகத்திற்கு கடத்தி வருவது குறித்து தீவிர விசாரனை நடத்தப்பட்டு வருகிறது.
========

தொடர்புடைய செய்திகள்

1. வேப்பனப்பள்ளி அருகே கிராமத்திற்குள் புகுந்த 10 அடி நீள மலைப்பாம்பு
வேப்பனப்பள்ளி அருகே கிராமத்திற்குள் புகுந்த 10 அடி நீள மலைப்பாம்பு
2. வேப்பனப்பள்ளி அருகே, தரைப்பாலம் உடைந்ததால் ஆற்றில் கயிறு மூலம் மறுகரைக்கு செல்லும் கிராம மக்கள்
வேப்பனப்பள்ளி அருகே, தரைப்பாலம் உடைந்ததால் ஆற்றில் கயிறு மூலம் மறுகரைக்கு செல்லும் கிராம மக்கள்