மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் பலி + "||" + Youth killed in accident

மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் பலி

மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் பலி
மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் பலியானார்.
ஆலங்குளம்:

ஆலங்குளம் மங்கம்மாள் சாலையை சேர்ந்தவர் மோசஸ். பாதிரியாராக உள்ளார். இவரது மகன் யோவான் (வயது 23). இவர் தென்காசி அருகே மத்தளம்பாறையில் உள்ள கார் ஷோரூமில் வேலை பார்த்து வந்தார். நேற்று காலை திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தென்காசி சாலையில் யோவான் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். வட்டாலூர் விலக்கு அருகே சென்றபோது, பூலாங்குளத்தை சேர்ந்த சரவணன் ஓட்டிவந்த மோட்டார்சைக்கிளும், யோவானின் மோட்டார்சைக்கிளும் எதிர்பாராதவிதமாக மோதின. இதனால் இருவரும் தூக்கி வீசப்பட்டனர். அப்போது அந்த வழியாக லோடு ஆட்டோ மீது விழுந்ததில் யோவான் தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

தகவலறிந்த ஆலங்குளம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். யோவானின் உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, லோடு ஆட்டோ டிரைவரான ஆலங்குளத்தை சேர்ந்த அப்பாதுரை மகன் டேனியல் என்பவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. கூலித்தொழிலாளி விபத்தில் பலி
கூலித்தொழிலாளி விபத்தில் பலியானார்.
2. பவானி அருகே ஆவின் பால் ஏற்றி வந்த வேன் மோதி மாணவி பலி
பவானி அருகே ஆவின் பால் ஏற்றி வந்த வேன் மோதி மாணவி பலி ஆனார்.
3. விருந்துக்கு சென்ற புதுமாப்பிள்ளை பரிதாப சாவு
கயத்தாறு அருகே லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் விருந்துக்கு சென்று திரும்பிய புதுமாப்பிள்ளை பரிதாபமாக இறந்தார்.
4. விபத்தில் தொழிலாளி சாவு
சங்கரன்கோவில் அருகே விபத்தில் தொழிலாளி பலியானார்.
5. குருவிகுளம் அருகே விபத்து: தாய்-மகன் பரிதாப சாவு
குருவிகுளம் அருகே சாலையோர தடுப்பு சுவரில் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் தாய்-மகன் பரிதாபமாக உயிரிழந்தனர்.